Friday 6 October 2017

ஆகமவிதிகள் பற்றிய சர்ச்சை



இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததும், ஜனவரி முதல்நாள் அவரவர் கும்பிடும் அல்லது இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபடுவது, ஒருவருக்கொருவர் “HAPPY NEW YEAR” – என்று, புத்தாண்டு வாழ்த்து கூறிக் கொள்வது – ஆகியவை மக்கள் மனதில் ஒன்றி விட்டது. எனவே வருடத்தின் தொடக்கம் ஒரு இறைவழிபாடுடன் துவங்க நினைப்பதில் தப்பில்லை. ஏனெனில் ஆங்கில நாட்காட்டியின் படியே நிறைய காரியங்களைச் செய்கிறோம். ஆனால் ஆண்டுதோறும் ”ஆங்கிலப்  புத்தாண்டு வழிபாட்டுக்காக  ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது .மீறித் திறந்தால், அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம்  நடத்துவோம்’ – என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய மாதிரியோ, ஆகமவிதிகளை மீறி அர்ச்சனை செய்தவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்த மாதிரியோ தெரியவில்லை..

ஞாயிற்றுக்கிழமைக்கு (இதுவும் பைபிள் அடிப்படையில் ஆங்கிலேயர் சொன்ன வார விடுமுறை நாள்) என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. மேலும், இந்த கனம் கோர்ட்டார் தீர்ப்பு என்பது, அர்ச்சகருக்கான நியமனத்தில் ஆகமவிதிகளைப் பற்றி சொல்லும்போது,  “முன்னால் இருந்து பார்த்தால் முதலியார் குதிரை; பின்னால் இருந்து பார்த்தால் செட்டியார் குதிரை” என்பது போல இருக்கிறது.

இவை ஆகம விதிகளா?

இந்துமதத்தில் ஆகம விதிகள் என்று ஏதேனும் நூல் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. தெரிந்த நண்பர்களிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்கிறார்கள். வேதத்தில் சொல்லி இருக்கு என்று சொல்லிச் சொல்லியே, வேத புத்தகத்தையே பார்க்காத கதையாக இருக்கிறது.. எதற்கெடுத்தாலும் ஆகமவிதிகள் என்று மேற்கோள் காட்டுபவர்கள் கீழ்க்கண்ட கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், எந்த ஆகமவிதிகளின் கீழ் நடைமுறையில் உள்ளன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

கோயிலில் எந்த இடத்தில் விளக்குகள் எரிந்தாலும் , அவை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றித்தான் எரிய வைக்க வேண்டும் என்பார்கள். இப்போது ஆன்மீகம் பற்றி வாராவாரம் எழுதும் பத்திரிகைகளில் இதனை ரொம்பவும் சிரத்தையாக சொல்லி இருப்பார்கள். பக்கத்திலேயே தீப எண்ணெய்க்கான விளம்பரமும் இருக்கும். அந்த காலத்தில் வெளிச்சத்திற்காக ஏற்றப்பட்ட தீப்பந்தங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி இருக்க இப்போது கோயில் முழுக்க டியூப்லைட் போன்ற மின்விளக்குகள்தான் இருக்கின்றன. கோயிலில் விஷேசம் என்றால் அலங்கார வண்ண விளக்குகள்தான்.

அப்புறம் இந்த கழிப்பிடம் சமாச்சாரம். உச்சி மீது கோயில் இருந்தாலும், அங்கேயும் மற்றும் எல்லாக் கோயில்களிலும் கட்டணக் கழிப்பிடங்கள்தான். இவை எந்த ஆகம விதிகளின் கீழ் இருக்கின்றன என்று தெரியவில்லை. (அவசரத்திற்கு இவை கட்டாயம் தேவைதான் என்பதிலும், கால மாறுதலுக்கு ஏற்ப வசதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை:)

சாதா தரினம், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டண வசூல். அதிலும் கட்டணம் இல்லாத V.I.P என்று மட்டும் அல்லாமல் V.V.I.P என்று ஒரு சிறப்புப் பிரிவு வேறு உண்டு. இறைவன் முன் அனைவரும் சமம் என்ற சித்தாந்தம் உடைபட்டு போகிறது.

இதேபோல் கோயிலில் படம் எடுக்கக் கூடாது என்று சில இடங்களில் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் சரியாகச் சொல்வதில்லை. ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் கருவறையை மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் பல பத்திரிகைகளில் அவர்கள் செல்வாக்கில் சில கோயில்களின் கருவறைப் படங்கள் வெளிவந்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இப்போது, “ திருப்பதி லட்டுக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது “ என்ற செய்தி வந்துள்ளது. .

இதற்கெல்லாம் மேலாக, இறைவன் சன்னிதானத்தில் மேளம் கொட்டுதல், பாட்டு பாடுதல் மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது  என்பது சம்பந்தப்பட்ட கலைஞர்களாலேயே நிகழ்வுறும். ஆனால் இப்போதோ பதிவு செய்யப்பட்ட மேள சத்தத்தை, அர்ச்சனை மணி ஓசையை கோயில்களில் ஒலி பரப்புகிறார்கள்.

எனவே, இதேபோல அர்ச்சகர் நியமனத்திலும், காலத்திற்கு ஏற்ப மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்வதில்லை.

தமிழ் பிராமணர்கள் செல்வாக்கு இழந்தமை:

கல்லூரியில், முதுகலையில் நான் படித்த சைவ சித்தாந்த நூல்களில் இன்ன ஜாதியார்தான் கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று, சொல்லப்பட்டு நான் படித்ததாக நினைவில்லை. மேலும் அவை இறைவனை வணங்குவது பற்றியும், இறையடியார்கள் பெருமை பற்றியுமே அவை பேசுகின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்று சொல்லும் கருத்துக்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. (கீழே காண்க)

/// தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக் குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை. தமிழகத்தில் சமய வளர்ச்சியும், வேதப்பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழிபாடும் பல தரப்பட்டதுறைகளில் விரிவடையவே அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக்கொள்ளும் ஆற்றல்கள் தமிழ்ப் பிராமணரிடம் பெருகவில்லை போலும்.

ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும்
தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும்,
மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும்
அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்கு வதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும், பொருளையும், குடியுரிமைகளையும் வாரி
வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக் கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு
விலக்கு அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகா சபை அமைத்துக் கொண்டு பிராமணர்கள் தத்தம் கிராமத்தின்
நிருவாகத்துக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள்.

உள நிறைவுடன் நல்வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து, அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மிக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணை நின்றார்கள். ஆனால், விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ்மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குலவேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்விக்கும் தமிழன் ஒருவன், தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், பிராமணர்களின் பின்னின்று கோயில்‘பிரசாதங்களைப்’ பெறவும் ஒப்புக் கொண்டு விட்டான். கோயில் கருவறையில் வடமொழியின் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ்ஒலி மறையவும் வழக்காறுகள் வகுக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குட் செல்லும் உரிமை பெற்றிருந்தும் சோழர் பாண்டியர் காலத்தில் அவ்வுரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள். ///  - (டாக்டர் கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியீடு, பக்கம் 316 - 317)

மேலே சொல்லப்பட்ட மேற்கோளில் இன்றைய சூழலில் யார் தமிழ் பிராமணர்கள் அல்லது யார் அயல்நாட்டு பிராமணர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். அன்று முதல்.அர்ச்சகர்கள் பிராமணர்களாகவே, நியமிக்கப்பட்டு வருவது கண்கூடு. தமிழ் மேட்ரிமோனியலில் (Tamil Matrimony) தமிழ் பிராமின் என்று விளம்பரம் வருவதை அனைவரும் பார்த்து இருக்கலாம். எனவே தமிழரான பிராமணர்கள், தெலுங்கு வம்ச சோழர்களின் ஆட்சி சூழல் மாறலுக்கு ஏற்ப, அவர்கள், தங்கள் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டு விட்டனர் எனலாம்.

திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் வைத்து போற்றப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரம், தனது பாயிரத்தில்,  ஆகமச் சிறப்பு பற்றி பத்து
பாடல்களில் பேசுகிறது. அப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ள சுருக்கமான கருத்துக்கள் இவை.

1. சிவன் 28 ஆகமகங்களை 66 பேருக்கு உபதேசித்தான்.
2. இந்த ஆகமகங்களின் (அதாவது கிரந்தங்களின்) எண்ணிக்கை              இருபத்தெட்டு கோடி நூறாயிரம்; இந்த ஆகமகங்கள் துணையுடன் விண்ணவர்கள் ஈசனது பெருமையைச் சொன்னார்கள்.
3. பதினெட்டு மொழிகளும் தெரிந்த பண்டிதர்கள் இந்த ஆகமங்கள் கூறும் வகையை அறிவார்கள்.
4. இந்த ஆகமங்கள் அனுபவத்தால் மட்டுமே விளங்கக் கூடியவை.
5. சிவனே ஆகமத்தில் அறிவாய் விளங்குகிறான்.
6. இந்த ஆகமகங்களை சிவனிடமிருந்து பெற்றவர்களுள் நந்தியும் ஒருவன்.
7. அப்படி நந்தி பெற்ற ஆகமங்கள் ஒன்பது.
8. இந்த ஆகமப் பொருளை இறைவன் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.
9. சிவன் இந்த ஆகமகங்களை உமாதேவிக்கு ஆரியம் (வடமொழி) மற்றும் தமிழ் இரண்டிலும் உபதேசித்தான்.
10. ஆனாலும் சிவனை ஆகம அறிவினால் மட்டும் அறிய முடியாது. (மேலே எண் எட்டில் சொல்லப்பட்ட கருத்தை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளவும்)

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
-          (திருமந்திரம். 58)

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
-          (திருமந்திரம் – 65)

எனவே திருமூலர் கருத்துப்படி பார்த்தாலும், எவையெவை ஆகம விதிகள் என்று நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை. திருமூலர் சொல்லும் இதோபதேசப் பாடல் ஒன்று இங்கே …

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.
-          (திருமந்திரம் 2014)

மக்கள் மனநிலை:

இந்தியாவில் பல விஷயங்கள் ஜாதி அபிமான அடிப்படையிலேயே இன்னமும் இருப்பது கண்கூடு. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், வருடா வருடம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையின் போது அங்கு வேலை பார்க்கும் ஒரு பிராமணர் ஒருவர்தான் பூஜை புனஷ்காரம் செய்வார். அவரும் அதனை விருப்பத்துடன், கர்ம சிரத்தையாக, பயபக்தியோடு செய்வார். அவரைத்தான் மற்றவர்களும் பூஜை காரியங்கள் செய்யச் சொல்லுவார்கள். மற்றவர்கள் யாரும் அந்த பூஜை செய்ய முன்வருவதும் இல்லை. இஷ்டப்படுவதும் கிடையாது.

எனவே இந்த நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஒருவேளை தீர்ப்பு ஆனாலும், கூட நடைமுறையில் என்ன நடக்கும் என்பது கண்கூடு. (வெளியே பகுத்தறிவு பேசும் பலரும், தங்கள் வீட்டு கல்யாணம் கிரகப் பிரவேச நிகழ்ச்சிகளுக்கு பிராமணர்களை வைத்தே செய்கிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட அல்லது குடும்பம் சார்ந்த விருப்பம். ஆனால் அவர்களே வெளியில் பிராமணர்களை பகுத்தறிவு என்ற பெயரில் திட்டுவதை என்னவென்று சொல்வது?)
 
( சென்ற ஆண்டு ஜனவரி (2016) முதல் வாரத்தில் எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது வெளியிட முடியவில்லை. பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இப்போது வெளியிட்டுள்ளேன்)

74 comments:

  1. Replies
    1. இந்த பதிவுக்கான முதல் கருத்தினைச் சொல்லி, கருத்துரைக் களத்தை தொடங்கி வைத்த நண்பர் பரிவை சே.குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. பதிவுகளில் ஆக்கபூர்வமான விவாதங்களையோ, வாதாடி தன் நிலையை நிலை நாட்டுகிற திறனையோ பார்ப்பதற்கில்லை, என்கிற காலம் இது.

    ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் கூட இப்படியான எதையும் புறந்தள்ளும் நிலை இருந்ததில்லை. நிறைய விவாதித்தோம். அருமையான நீண்ட பின்னூட்டங்கள் அறிவுபூர்வமாக எழுதிய பதிவுகளுக்கு அணிகலனாய்ச் சேர்ந்தன. நேர்-எதிர் என்று எரிந்த கட்சி எரியாத கட்சியாக பின்னூட்டங்கள் பற்றி எரிந்தாலும் பதிவு விஷயங்களிலிருந்து இம்மியளவும் விலகாது வாதாடும் திறமை எங்கு போயிற்று என்று தெரியவில்லை.

    மனம் ஒன்றிப் படிக்கவோ, இவ்வளவு அக்கறையுடன் எழுதியிருக்கிறாரே என்ற எண்ணத்தில் தானும் ஒரு பத்து வரிகளாவது பின்னூட்டமாக எழுதி அதனால் ஏற்படும் அறிவு வெளிச்சத்தில் விஷயங்களை ஆராய்வோம் என்ற முனைப்பும் இல்லை. எழுதுபவர் தான் எங்கிருந்தெல்லாமோ தான் எழுதும் செய்திக்கு உசாத்துணையாக ஆவணச் செய்திகளைத் திரட்டி எழுத வேண்டி இருக்கிறது.
    யாரையும் புண்படுத்தி விடாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை நேர்மையுடன் சொல்ல முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

    எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போகும் பொழுது எண்ணங்களில் கனல் தகிக்கும் பொழுதும் அதை நீரூற்றி அணைக்கவே நமக்கு நாமே ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமோ என்றும் சோர்வுற வேண்டி உள்ளது.

    அந்த உணர்வில் மனம் ஆழ்ந்து எதையும் விவாதிக்க முடியவில்லை, ஐயா. மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      // பதிவுகளில் ஆக்கபூர்வமான விவாதங்களையோ, வாதாடி தன் நிலையை நிலை நாட்டுகிற திறனையோ பார்ப்பதற்கில்லை, என்கிற காலம் இது .//

      // ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் கூட இப்படியான எதையும் புறந்தள்ளும் நிலை இருந்ததில்லை. நிறைய விவாதித்தோம். அருமையான நீண்ட பின்னூட்டங்கள் அறிவுபூர்வமாக எழுதிய பதிவுகளுக்கு அணிகலனாய்ச் சேர்ந்தன. நேர்-எதிர் என்று எரிந்த கட்சி எரியாத கட்சியாக பின்னூட்டங்கள் பற்றி எரிந்தாலும் பதிவு விஷயங்களிலிருந்து இம்மியளவும் விலகாது வாதாடும் திறமை எங்கு போயிற்று என்று தெரியவில்லை. //

      உண்மைதான் அய்யா. உங்களுடைய கருத்துரை 10 வருடங்களுக்கு முன்பு தமிழ்மணத்தில் நிலவிய சாதாரண நிலையையும், அதன்பின் ஏற்பட்ட அசாதரணமான நிலவிய சூழல்கள் இரண்டையுமே நினைவு படுத்தி விட்டன.

      இப்போதெல்லாம் பலரும் வலைப்பதிவில் வரும் கட்டுரைகளை மேம்போக்காகவே படிக்கின்றனர். அதிலும் இதுபோன்ற நீண்ட கட்டுரைகளை படிப்பதில் ஆர்வமும் காட்டுவதில்லை. நீங்கள்

      // யாரையும் புண்படுத்தி விடாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை நேர்மையுடன் சொல்ல முயற்சிக்க வேண்டியிருக்கிறது. //

      என்று குறிப்பிட்டதைப் போல, நானும் இந்த கட்டுரையில் பக்கசார்பு எதுவும் இல்லாமலேயே எழுதி இருக்கிறேன்.

      Delete
  3. விவாதத்துக்குறிய விடயம்தான் நண்பரே
    ஒன்று மட்டும் தெளிவாகிறது இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்பது உண்மை இல்லை.

    அரசியல் பலம் உள்ளவன் குடும்பத்துடன் கருவறையருகில நின்று வணங்குகிறான் தெய்வமும் 5 வருடம் துணை நிற்கிறது.
    த.ம.பிறகு.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. டாக்டர் கே.கே.பிள்ளையது நோக்கு ஒரு சார்பு உடையது என்பதை தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

    திருமூலர், மற்ற சித்தர்களின் வழியும் தனித்தன்மை உடைத்து. சிலவற்றை வைத்து எந்த முடிவுக்கும் வர வாய்ப்பில்லை. சிவவாக்கியர் பாடல்கள் படித்தால் நமக்குப் புரியும்.

    தமிழ், தமிழர் என்று சொல்வதே என்னைப் பொறுத்தவரையில் மதுரைக்குக, கீழ்ப்புறம்தான். அதற்கு மேல் எல்லா இடங்களும் (தற்போது தமிழ்நாடு என அறியப்படுவது, கர்நாடகா/ஆந்திரா/சேர்ர் அளம் ஆகியவற்றின் சில பகுதிகள்) கலப்புதான். இந்தக் பகுதியிலும் தூய கலப்பில்லாத தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். பிற்காலத்தில் கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    டாக்டர் கே கே பிள்ளை அவருக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறார். அவர் எழுத்து suitable for his future என்ற முறையில் எழுதப்பட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இணையத்தில் விவாத்த்துக்கு இடமேது? அதுவும்தவிர சாதி, மதம் சம்பந்தமான கருத்துகளில் விவாதம், கருத்துக்கள் பெரும்பாலும் விதண்டாவாதமாகவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி.

      // டாக்டர் கே.கே.பிள்ளையது நோக்கு ஒரு சார்பு உடையது என்பதை தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.//

      // டாக்டர் கே கே பிள்ளை அவருக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறார். அவர் எழுத்து suitable for his future என்ற முறையில் எழுதப்பட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. //

      நான் இந்த நூல் முழுவதையும், கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒருமுறையும், அப்புறம் சொந்தமாக விலைக்கு வாங்கிய பின் இருமுறையும் படித்து இருக்கிறேன். அவ்வப்போது மேற்கோள்கள் சம்பந்தமாகவும் படிப்பதுண்டு. எனக்குத் தெரிந்து இந்த நூலில் டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எந்த ஒரு சார்பாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.

      // ஆனால் இணையத்தில் விவாதத்துக்கு இடமேது? அதுவும்தவிர சாதி, மதம் சம்பந்தமான கருத்துகளில் விவாதம், கருத்துக்கள் பெரும்பாலும் விதண்டாவாதமாகவே இருக்கும். //

      நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அதனால்தான் இந்த கட்டுரையை சென்ற ஆண்டே எழுதி வைத்து விட்டாலும் உடனே வெளியிடவில்லை.

      Delete
    2. "அவர்கள் எந்த ஒரு சார்பாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்." - உங்கள் கருத்தை மதிக்கிறேன் இளங்கோ சார். அதனால் தவறாக எண்ணல்வேண்டா. நீங்கள் ஒருபக்க சார்ப்பாக எழுத நினைப்பதாகவும் நான் நினைக்கவில்லை.

      பிள்ளையவர்களின் இந்த ஒரு வாக்கியமே போதும், அவர் ஒருபக்க சார்பானவர் என்று சொல்ல.

      "தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக் குறைபாடுகளைக் கண்டார்கள்"

      ஒரு உதாரணம். நாமிருவரும் இன்னும் 300-500 வருடங்கள் இருக்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். அப்போது நான், '400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் என்று சொல்லப்படக்கூடிய கூட்டத்துக்கு அவ்வளவு அறிவு இருந்ததுபோல் தெரியவில்லை. அவர்களுக்கு ஆளுமையும் இருந்ததுபோல் தோன்றவில்லை. அதனால்தான் அவர்கள் பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தங்கள் மானிலத்தின் தலைவர்களாக, முதலமைச்சர் என்று சொல்லப்பட்ட பதவியில் ஆவலோடு அமர்த்தினார்கள்" என்று எழுதினால், அதில் 'ஒரு பக்க சார்பு இருக்கிறதா, உண்மை இருக்கிறதா' என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

      அதேபோல், "மதுரையில் இருந்த மக்கள், காவல் அதிகாரிகள், ஊர்த்தலைவர்கள் போன்றவர்கள் திறமைசாலிகளாக இல்லாததனால், நாயக்கர்கள், தங்களோடு அழைத்துவந்த தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பொறுப்புக்களைக் கொடுத்தார்கள்" என்று எழுதுவது வீண்வாதம் தானே.

      மற்றபடி நீங்கள் எழுதியது, புதியனபற்றி அறியும் வாசலைத் திறந்துவைத்துள்ளது. கீதா சாம்பசிவம் மேடம் எழுதியவைகளும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள்.

      Delete
    3. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இங்கு யாருமே எந்த சார்பும் எடுத்து எழுதவில்லை. ஸ்ரீரங்கத்தில் மேடம் கீதா சாம்பசிவம் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்புக்கு நானும் சென்று இருக்கிறேன். அன்றைக்கு அவருக்கு உடல்நலக் குறைவு என்ற போதிலும் வந்திருந்தவர்களை அவரும் அவரது கணவரும் வரவேற்று உபசரித்தனர். எனவே பெருந்தன்மையான அவர் இங்கு நட்பு ரீதியாகவே சொன்னதில் எந்த குறையும் இல்லை.

      நிற்க கே.கே.பிள்ளை அவர்களது நூலை மட்டுமல்லாது, எந்த நூலையுமே ஒட்டியும் வெட்டியும் பேசலாம்.

      Delete
  5. நல்ல பகிர்வு சார். நாம் கோவிலுக்கு வாங்கிச்செல்லும் தேங்காய் பூ பழம் கூட vip கூப்பன் இருந்தால் தான் கருவறைக்குள் செல்லும் நிலைமை தற்போது அதிகம் காண நேர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. சிந்திக்க வைக்கும் நல்ல பதிவை வெளியிட ஏன் தாமதம் செய்தீர்களோ :)

    #சாதா தரினம், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டண வசூல்#
    இதை படித்ததும் நினைவுக்கு வந்த புதுக் கவிதை ...ஐம்பது ரூபாய் கொடுத்தால் கடவுளின் பக்கத்தில் நிற்கலாம் ,ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் கடவுள் நம் பக்கத்தில் வந்து நிற்பார்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த வலைப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைகளுக்கு நன்றி. ’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பை ஒட்டியே இந்த பதிவை எழுதி இருக்கிறேன். மற்றபடி பிராமணர்களின் கலாச்சாரத்தையோ அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ எழுதியது அல்ல. நான் பிராமணர்களின் எதிர்ப்பாளன் இல்லை. எனது வாழ்வில் பங்களிப்பு செய்தவர்களில் பிராமண நண்பர்களும் உண்டு

      // ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். //

      எனக்குத் தெரிந்து பெரியகோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது, மற்ற அரசு வேலைகள் நியமனம் செய்வதில், பொதுவெளியில் விளம்பரம் செய்து அதிகாரிகள் / எழுத்தர்களை பணியில் அமர்த்துவது போல செய்வது கிடையாது. இந்த அர்ச்சகர் வேலைக்கான தகுதித் தேர்விற்கு எங்கு படித்து சான்றிதழ் பெற வேண்டும், தகுதித் தேர்வை நடத்துவது யார் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை கிடையாது. பெரும்பாலும் அர்ச்சகர் என்றால், பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே என்பதே முடிவாக இருப்பதால் இதில் மற்றவர்கள் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை.
      மேலும் அறநிலையத்துறை சாராத பல கோயில்களை பல ஜாதியினரும் கட்டியிருந்தாலும், கொஞ்சம் வசதியான கோயில்களில் பலரும் ஒரு குருக்களை அல்லது அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது பூஜை செய்யவோ யாரை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. ( அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கோயில்களுக்கும் இது பொருந்தும். )

      // அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார். //

      இது நான் அறியாத தகவல். அய்யா வைகுண்டர் கோயில் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன்.

      Delete
    2. // பெரியகோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது, மற்ற அரசு வேலைகள் நியமனம் செய்வதில், பொதுவெளியில் விளம்பரம் செய்து அதிகாரிகள் / எழுத்தர்களை பணியில் அமர்த்துவது போல செய்வது கிடையாது. இந்த அர்ச்சகர் வேலைக்கான தகுதித் தேர்விற்கு எங்கு படித்து சான்றிதழ் பெற வேண்டும், தகுதித் தேர்வை நடத்துவது யார் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை கிடையாது.// முதல்லே இது அரசு வேலை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் இந்தக் கோயில் வேலைகளுக்கு விருப்பத்தின் பேரிலேயே வருவார்கள். எல்லோரும் நினைக்கிறாப்போல் கற்பூர ஆரத்தி காட்டினதும் தட்டிலே காசு விழும் என எண்ணும் வேலை இல்லை. ஈடுபாடு வேண்டும். காசுக்காக வேலை செய்பவர்கள் ஒரு சில கோயில்களிலே இருக்கலாம். ஆனால் பெரிய பாரம்பரியமான கோயில்களிலே கடவுளுடன் அவர்களுக்கு உள்ள நெருங்கிய தொடர்பு, பற்று காரணமாகவே பணி புரிவார்கள்.

      Delete
    3. ஆகமப் பள்ளிகள், "எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்" என்னும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டித் தமிழக அரசால் திறக்கப்பட்டவையே! அவற்றில் படித்த சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் நீங்கள் சொல்லும் பெரிய கோயில்கள் கோயில் சார்ந்தே ஆகம வித்யாசாலைகள், வேத பாடசாலைகள், பிரபந்தப் பாடங்கள், தேவார, திருவாசகம் கற்பிக்கும் பள்ளிகள் ஆகியவற்றை நடத்துகின்றன. இவை எத்தனையோ ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருகின்றன. ஒரு சில சிவ மடங்கள், வைணவ மடங்களும் அந்த அந்தக் கோயில் சார்ந்த பாடசாலைகளை நடத்துகின்றன. சிதம்பரம் கோயில் பிரகாரங்களில் தருமை ஆதீனத்தின் திருமுறைப் பள்ளியைப் பார்க்கலாம். அப்படியே மதுரைக் கோயிலிலும் பார்க்கலாம். அங்கே கற்று வருபவர்கள் பெரும்பாலும் பாரம்பரியமான அர்ச்சகர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். ஆகவே அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இயல்பாக நிகழும் ஒன்று. இந்த அர்ச்சகர்களுக்குப் பணி ஓய்வு என்பது கொடுக்கிறார்களே தவிர்த்து, அவர்களுக்கு ஓய்வூதியம் என்றெல்லாம் இல்லை. அரசு இவர்களுக்குச் சம்பளம் நிர்ணயம் செய்வது எல்லாம் மிகக் குறைவான தொகையே ஆகும். எங்கள் பூர்விக ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை 1000 ரூபாய் தான்! அதற்கும் அவர் 10,000 ரூபாய் முன் பணம் கட்ட வேண்டும். அந்தத் தொகையை நாங்கள் தான் கட்டி இருக்கோம். அவருக்கு இன்னமும் இந்த உதவித் தொகை கிடைக்க ஆரம்பிக்கவில்லை! இருந்தாலும் நாங்கள் எங்கள் ஓய்வூதியத்திலிருந்து அவருக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கி வருகிறோம். பல கோயில்களிலும் அர்ச்சகர்கள், பட்டாசாரியார்களுக்கு இதான் நிலைமை!

      Delete
    4. பெரிய கோயில்களாக இருந்தாலும் அவற்றின் வருமானம் மேலும் மேலும் அதிகரித்தாலும் அதன் பலன் கோயில்களுக்கோ, அர்ச்சகர்களுக்கோ, ஊழியர்களுக்கோ போய்ச் சேருவதில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலும் பெரிய கோயில்களில் வாரிசு அடிப்படையிலேயே அர்ச்சகர்கள் வேலைக்கு வருகின்றனர். உச்சநீதிமன்றமும் பெரிய கோயில்களில் ஏற்கெனவே இருந்து வரும் நடைமுறைகளை மாற்றக் கூடாது எனத் தெரிவித்து உள்ளது. மற்றக் கோயில்களில் அர்ச்சகராக இருக்க எல்லோரும் முன் வருவதில்லை. நகரங்களில் கட்டப்படும் புதிய கோயில்களில் நியமிக்கப்படுவோர் யாருமே ஆகமம் கற்றவர்கள் இல்லை. அந்தக் கோயில்களும் ஆகம முறைப்படியானவை அல்ல. ஆகவே அங்கே யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். இங்கே ஶ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் படித்துறையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு பிராமணரல்லாதவர் ஒருவரே வழிபாடுகள் செய்து வருகிறார். அவரிடம் தான் நாங்கள் எங்கள் வழிபாடுகளைச் செய்துதரச் சொல்லிச் செய்து வருகிறோம். இத்தனைக்கும் அது புராதனமான கோயில் தான்!

      Delete
    5. //கொஞ்சம் வசதியான கோயில்களில் பலரும் ஒரு குருக்களை அல்லது அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது பூஜை செய்யவோ யாரை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. ( அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கோயில்களுக்கும் இது பொருந்தும். )//

      இது விஷயத்தில் மக்களின் மனோபாவம் அப்படி உள்ளது. பொதுவாக பிராமணரல்லாதோர் சொல்வது பிராமணர்களால் தான் இதை எல்லாம் தப்பில்லாமல் உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்ய முடியும் என்பதே! இதைப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன். அதே மாரியம்மன் கோயில் பூசாரிகள் என்றால் ஏற்கும் மக்கள் இம்மாதிரியான கோயில்களில் பிராமணர்களே வழிபாடு செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதோடு தமிழில் அர்ச்சனை செய்து கொடுத்தால் ஏற்பதற்கும் தயங்குகின்றனர். ஒரு சிலர் ஏற்கலாம். நாங்கள் பல கோயில்களில் தமிழில் அர்ச்சனைகளை ஏற்றிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் எல்லோரும் வடமொழியில் சங்கல்பம் செய்து வடமொழியில் அர்ச்சனைகள் செய்வதையே ஏற்கின்றனர். இதை வைத்தீசுவரன் கோயிலில் பார்த்திருக்கிறேன். ஆக இது மக்களின் மனோபாவத்தைப் பொறுத்தது!

      Delete
  8. பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன்.

    கட்டண தரிசனங்கள் கோயில்களில் எந்த அர்ச்சரகராலும் ஏற்படுத்தப்படவில்லை. அது அறநிலையத் துறை அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது, பெரும்பாலான மக்கள் அதை எதிர்க்கிறார்கள். தென் மாவட்டங்களான நாகர்கோயில், சுசீந்திரம், கன்யாகுமரி, திருவட்டாறு ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு தரிசனம் என்பது இல்லை. மக்கள் சாதாரணமாகச் சென்று போய்ப் பார்த்து வரலாம். கூட்டம் நிறைந்திருந்தாலும் மக்கள் தரிசனத்துக்கு இடையூறாகவோ தடங்கலாகவோ இல்லை. மாலை வேளையில் கன்யாகுமரியின் தரிசனம் செய்தோம். இரவு ஏழு மணிக்கு சுசீந்திரத்தில்! எல்லாம் நன்றாகவே பார்க்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. // பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். //

      ஆகம விதிகள் பற்றிய புரிதல் எனக்கு இல்லாமல் இல்லை. நான் திருச்சி நேஷனல் கல்லூரியில் தமிழ் எம்,ஏ படித்தபோது எங்களுக்கு கம்பராமாயணம் (முழுவதும் ) மற்றும் சைவசித்தாந்தம் இரண்டையும் முக்கிய பாடங்களாக ( Main Subject )வைத்து இருந்தனர். நான் இரண்டையும் பட்ட மேற்படிப்புக்கான பாடங்களாக கருதி படிக்கவில்லை.; இரண்டிலும் ஒன்றிப் போய்தான் படித்தேன். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு மடத்தில் ( தாயுமானவர் மடம் என்று நினைக்கிறேன் ) சைவ சித்தாந்த வகுப்புகள் சிலவற்றிற்கு சென்று குறிப்புகளும் எடுத்து இருக்கிறேன். எனவே திடீரென்று எனக்கு தோன்றியதை எழுதிவிடவில்லை.

      // இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன். //

      மேடம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. எனது வலைத்தளத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்ட, திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலில் ‘தமிழுக்கு உரிமை உண்டு என்று சொல்வதைப் போல உங்களுக்கு உரிமை உண்டு.

      கட்டண தரிசனம் என்பது அறநிலையத் துறையால் நிர்ணயம் செய்யப்படுவது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

      மேலும் உங்கள் பதிவினில் நீங்கள் சுட்டிக் காட்டிய உங்களுடைய பதிவுகளுக்கு, எனது பதிவினில் உள்ள ” திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள் ‘ விவரங்களே போதும் என்று நினைக்கிறேன்.

      Delete
  9. வைணவர்களிலும் மாற்று இனத்தைச் சேர்ந்த அந்தணரல்லாத ஒருவர் வைணவ ஆசாரியர்களில் ஒருவரான பட்டராக ஆகி உள்ளார். இது அவரவர் விருப்பம், படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. வைணவ ஆகமங்களில் வைகானசம், பாஞ்சராத்ரம், முனித்ரயம் எனப் பிரிவுகள் உள்ளன. வைகானசம், பாஞ்சராத்ரம் குறித்து விளக்கங்களை என்னுடைய சிதம்பர ரகசியம் நூலில் நானும் கேட்டறிந்து விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஆகமவிதிகளைக் கற்றுக் கொடுக்கவெனச் சென்னையிலும் ஓர் பள்ளி உள்ளதாக அறிகிறேன். பெரும்பாலான சிவாசாரியார்கள் இங்கே திருச்சியில் உள்ள ஓர் பள்ளியிலேயே கற்கின்றனர் என்றும் அறிந்தேன். வெறும் வேதம் கற்பதோடு எதுவும் முடிந்து விடாது. எந்த வேதத்திலும் ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடவும் இல்லை. ஆகமப் படிப்பு தனி! வேதம் படித்தல் தனி! அதர்வ வேதத்தில் ஒரு சில குறிப்பிட்ட யாகங்கள், யக்ஞங்கள், பரிகார பூஜைகள் குறித்தும் சில தேவதைகளின் வழிபாட்டு முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத வைத்திய முறை பெரும்பாலும் அதர்வ வேதம் சார்ந்தவை என்றே சொல்லப்படுகின்றன. சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது!

    ReplyDelete
    Replies
    1. ஆகமவிதிகள் கற்றுத்தரும் பள்ளிகள் சென்னையிலும் திருச்சியிலும் இருப்பதனை உங்களுடைய இந்த கருத்துரை மூலம் தெரிந்து கொண்டேன். இங்குள்ள (திருச்சியில்) நண்பர்களிடம் கேட்டு விவரம் தெரிந்து கொள்கிறேன்.

      // சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது! //

      இப்போது ஆயுர்வேத மருத்துவப் படிப்பு என்பது ஆங்கிலத்திலும், தமிழிலும் வந்து விட்டது. எனது உறவினர் ஒருவர் AYURVEDIC PHYSICIAN

      Delete
    2. இருக்கலாம் ஐயா. எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்தவரை குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டவர் கூட சம்ஸ்கிருதம் கற்றே மருத்துவப் படிப்புப் படித்தனர். பரத நாட்டியம் கற்கவும் சம்ஸ்கிருத அறிவு வேண்டும் எனச் சிலர் சொல்கின்றனர். திரு முரசொலி மாறனின் மகள் அன்புக்கரசி என்பவர் நாட்டியமணி பத்மா சுப்பிரமணியத்திடம் நாட்டியம் கற்கவென்பதற்காகவே சம்ஸ்கிருதம் படித்தார்! மாறனின் இரு மகன்களும் வடமொழி, ஹிந்தி நன்கு தெரிந்தவர்களே!

      Delete
    3. சித்த வைத்தியத்தில் உள்ள மறைபொருளுடன் கூடிய பாடல்களைப் போல் ஆயுர்வேதத்திலும் உண்டு என்கிறார்கள். அதற்கு சம்ஸ்கிருதப் புலமை தேவை என்பதும் சிலர் கருத்து! :)

      Delete
  10. அர்ச்சகர் வேலைக்கு மற்றவர்கள் போட்டியிடும் அளவு அவர்களுக்கு வருமானம் இருப்பதில்லை. சில பெரிய கோவில் கதைகள் வேறு. அர்ச்சகர்கள் என்று இருக்கும் பிராமணர்கள் வேறு. அவர்களிலேயே சிதம்பரத்தில் இருக்கும் அர்ச்சகர்கள் தனி.

    பிராமணர்கள் என்று இருப்பதால் அவர்கள் அனைவரும் கோவில் கருவறைக்குள் சென்றுவிட முடியாது. அவர்களும் வெளியேதான் நிற்க வேண்டும். அர்ச்சகர்கள் மட்டுமே கருவறைக்குள் இருப்பார்கள்.

    எல்லா கோவில்களிலுமே இப்போது காசுக்கு இருக்கும் மதிப்பு வேறு. பணம் எதையும் செய்யும்.

    கீதாக்கா நல்ல விளக்கங்கள் அளித்திருக்கிறார். நேற்றைய செய்தியில் நான் படித்த இன்னொரு செய்தி பிராமணரல்லாத 36 பேர்களும், 6 தலித்துகளும் கேரளாவில் அர்ச்சகர் வேலைக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனராம்.


    http://english.mathrubhumi.com/news/kerala/devaswom-recruitment-board-recommends-appointment-of-36-non-brahmins-as-priests-mathrubhumi-1.2288246?pq=1.310

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் இங்கே குறிப்பிட்ட , பிராமணரல்லாத 36 பேர்களும், 6 தலித்துகளும் கேரளாவில் அர்ச்சகர் வேலைக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்திதான், சென்ற ஆண்டு எழுதி வைத்திருந்த இந்த பதிவை வெளியிட வைத்தது.

      Delete
  11. கோயில் விளக்கு விஷயம். அந்தக் காலங்களில் கோயில்களில் இலுப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் கலந்தே தீபங்கள், தீவட்டிகள் ஏற்றுவார்கள். கோயில்களுக்கு என உள்ள நிலங்களில் இலுப்பை மரங்கள், ஆமணக்கு மரங்கள்(கொட்டைமுத்துச் செடி என்பார்கள், சின்ன மரமாகக் காணலாம், வேலியோரங்களில் பெரும்பாலும் காணப்படும்.) எள் விதைப்பு போன்றவை நடைபெற்றுப் பெரும்பாலும் அந்த அந்தக் கிராமம் அல்லது கோயிலைச் சேர்ந்த கணக்குப் பிள்ளை, தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் எண்ணெய்க்குத் தேவையானவை சேகரிக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டுக் கோயில்களில் கொடுக்கப்படும். இப்போதெல்லாம் எல்லாமும் மாறி விட்டன. கோயில் சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. // இப்போதெல்லாம் எல்லாமும் மாறி விட்டன. கோயில் சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருக்கிறது. //

      ஆமாம் மேடம் நீங்கள் சொல்வது சரிதான். இப்போதெல்லாம் இலுப்பைத் தோப்புகளே இல்லையென செய்து விட்டார்கள். எல்லாமும் மாறி விட்டன.

      Delete
  12. அப்புறமா இந்த கே.கே.பிள்ளை சொல்லி இருப்பது குறித்து!

    ஹூம், எந்த அரசன் வடக்கே இருந்து பிராமணர்களை வரவழைத்தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள் அவரை!

    அவருக்குப் "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" பற்றித் தெரியுமா? அறிந்திருக்கிறாரா? ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்தவன் என்பார்கள். க்டைச்சங்க காலத்துக்கும் முந்தினவனாகக் கருதபப்டுகிறவன். "சின்னமனூர்ச் செப்பேடு" இவனைக் குறித்துக் குறிப்பிடுகிறது. இவன் தான் கடல் வடிவலம்ப நின்ற பாண்டியனாக இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இவன் காலத்தில் தான் கடலை வற்றச் செய்த வேல் எறிந்ததாகவும், பின்னர் பிரளயம் ஏற்பட்டதாகவும் இவன் வாரிசே உயிர் பிழைத்து அடுத்த மனுவாக ஆனதாகவும் சொல்வார்கள். இந்த முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிப் பல புலவர்கள் பாடல்கள் புனைந்திருக்கின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு,
    "கொல்யானை பலஓட்டிக்

    கூடாமன்னர் குழாந்தவிர்த்த

    பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"

    என்று சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. மேலே டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய நூல் குறித்து, நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு சொல்லிய மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.

      // நான் இந்த நூல் முழுவதையும், கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒருமுறையும், அப்புறம் சொந்தமாக விலைக்கு வாங்கிய பின் இருமுறையும் படித்து இருக்கிறேன். அவ்வப்போது மேற்கோள்கள் சம்பந்தமாகவும் படிப்பதுண்டு. எனக்குத் தெரிந்து இந்த நூலில் டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எந்த ஒரு சார்பாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். //

      Delete
  13. இன்னும் மாங்குடி மருதனார், இவனைக் குறித்து, பல்சாலை முதுகுடுமித்

    தொல்ஆணை நல்லாசிரியர்

    புணர்கூட்டுண்ட புகழ்சால்

    சிறப்பின்" என்று மதுரைக் காஞ்சியில் சொல்லி இருக்கிறார்.

    https://tinyurl.com/y9hydqhs விக்கியின் இந்தச் சுட்டிக்குச் சென்றால் மேலும் இவனைக் குறித்த தகவல்களை அறியலாம். வடமொழியாகட்டும், தமிழாகட்டும் ஒன்றுக்கொன்று துணையாகவே இருந்து வந்திருக்கின்றன. வடமொழிப் புலவர்கள் வட நாட்டை விடத் தென் தமிழ்நாட்டில் தான் மிகுதி! வடமொழி அறியாமலா கம்பனும், வில்லி புத்துராரும் ராமாயணமும், மஹாபாரதமும் தமிழில் எழுதினார்கள்? ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனெனில் அதர்வ வேதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. சாமவேதிகள் குறைவு. அப்படி நேரும் சந்தர்ப்பத்தில் வரவழைத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. // ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். //

      மேடம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் இங்கே இவ்வாறு குறிப்பிட்டதற்கும், டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் அங்கே அவரது நூலில் , தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்ற தலைப்பில் சொன்ன கருத்துக்களுக்கும் பெரிதாக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

      Delete
    2. நீங்கள் எல்லோரையுமே வரவழைத்ததாகத் திரு கே.கே.பிள்ளை சொன்னதாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள். அப்படி இல்லை என்பது தான் என் கருத்து! ஒரு விதத்தில் பார்த்தால் எல்லோருமே அங்குமிங்குமாகக் குடி பெயர்ந்து பின்னர் ஸ்திரப்பட்டவர்களே! :)

      Delete
  14. சிதம்பரத்தில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறவில்லை. வைதிக முறைப்படியே நடைபெறுகின்றன. சிதம்பரம் தீக்ஷிதர்கள் தங்களுக்குள்ளேயே மணவினை கொள்வார்கள், கொடுப்பார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம். அவர்களும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இல்லாமல் மாற்றுச் சம்பந்தம் வைத்துக் கொண்டால் கோயிலுக்கு அவர்கள் வழிபட வரலாமே தவிர்த்து வழிபாடுகளில் பங்கெடுக்க முடியாது. கோயிலில் இருந்து அவர்கள் பங்கும் அவர்கள் குடும்பத்திற்குப் போய்ச் சேராது. இது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பாதிப்பாக இருக்கும். அவர்களுக்குள்ளேயே சம்பந்தம் வைத்துக் கொண்டால் தான் கோயிலில் வழிபாடு செய்ய முடியும். அதற்கும் திருமணம் ஆகி இருக்க வேண்டும். திருமணம் ஆகாத பிரமசாரிகள் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்ய முடியாது. ஆனால் மற்றச் சிவன் கோயில்களில் அப்படி இல்லை. பிரமசாரியான சிவாசாரியார்கள் உண்டு. இப்போதைக்கு இவை தான். கடமை அழைக்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரம் எப்போதுமே தனிதான், எல்லாவற்றிலும். ‘தில்லைப்பெண் எல்லை தாண்டாது’ என்பது பழமொழி.

      Delete
  15. எழுத்தில் சிந்தனையில் மிதவாதத்தை கடைபிடிக்கும் நீங்களா இந்தப் பதிவை எழுதியிருக்கீங்க என்றே வரிக்கு வரி வாசித்துக் கொண்டே வந்தேன். கடைசி வரி உங்கள் தயக்கத்தையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதையும் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் பதிவையும் கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டமும் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // எழுத்தில் சிந்தனையில் மிதவாதத்தை கடைபிடிக்கும் நீங்களா இந்தப் பதிவை எழுதியிருக்கீங்க என்றே வரிக்கு வரி வாசித்துக் கொண்டே வந்தேன்.//

      நான் பெரும்பாலும், இரவு உறங்குவதற்கு முன்பு, இணையத்தில் வந்துள்ள கடைசி செய்திகளைப் படித்து விட்டே படுக்கச் செல்வேன். நேற்று முன்தினம் (06.10.17) இரவு, கேரளாவில் தலித் உட்பட பிராமணரல்லாதவர்கள் 35 பேர் குருக்களாக நியமனம் என்ற செய்தியைப் படித்தேன். உடனே எனக்கு, தமிழ்நாட்டில், ’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பும், நான் இது சம்பந்தமாக எழுதி வைத்த கட்டுரையும் நினைவுக்கு வந்தன.

      ஆறு வருடங்களுக்கு முன்பு, எனது மகளின் நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு, நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிக்கும் கலைஞர்களைப் பார்க்க போயிருந்தேன். அப்போது அவர்கள் முன்புபோல் பல கோயில்களில் எங்களை வாசிக்க அழைப்பதில்லை; கம்ப்யூட்டரில் பதிவு செய்து வாசிக்கிறார்கள். வருமானம் போதவில்லை என்று சொன்னார்கள். உடனே எனக்கு சில கோயில்களில், நாதஸ்வர பின்னணியில் மேளம், ஒன்று தானாகவே அடித்துக் கொள்வது போல எலெக்ட்ரானிக் சிஸ்டம் அமைத்து தேவைப்படும்போது ஒலிக்கச் செய்வது நினைவுக்கு வந்தது. இப்போதும் அந்த காட்சி மனதில் நிழலாடியது.

      ஒரு பக்கம் ஆகம விதிகளைக் காட்டி குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் அர்ச்சகர் நியமனம்; இன்னொரு பக்கம் அதே கோயிலின் இசைக்கலைஞருக்கு வேலை வாய்ப்பு இல்லை. இவற்றை எல்லாம் எண்ணியே,

      தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக, தீர்ப்பு வந்தபோது, இந்த கட்டுரையை, சென்ற ஆண்டு ஜனவரி (2016) முதல் வாரத்தில் எழுதி வைத்து இருந்தேன். ஆனாலும் தயக்கம் காரணமாக அப்போது வெளியிட முடியவில்லை. பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இப்போது வெளியிட்டுள்ளேன். அப்போதே சூட்டோடு சூடாக வெளியிட்டு இருக்க வேண்டும்.

      இப்போதும் கேரளாவில் இந்த சட்டம் அமுலுக்கு வருவதில் நிறையவே தடைகள், நடைமுறைச் சிக்கல்கள் என்று நிறையவே எதிர் பார்க்கலாம்.

      Delete
  16. உண்மை அறியாமல் பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்மூடித்தனமாக பின்பற்றாமல் ஆராய்ந்து பின்பற்ற வேண்டும்.... உங்கள் ஆய்வு சிறப்பு.... விவாதங்கள் உணமையை உரைக்கும்... சார்

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  17. கீதா சாம்பசிவம் அவர்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. எனக்கும் இன்றுவரையிலும் பலவிதமான கேள்விகள். எதற்கெடுத்தாலும் பிரமணர்கள் மேல் குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பதா? என்ன தான் காரணம்? நீட் பரிட்சை வந்த பிறகு உண்மையிலே நம் கல்வி எப்படித்தான் இருந்தது. ஏன் வளர்ந்தது? ஏன் வளரவில்லை? ஏன் இன்னமும் பிரமணர்களை தூற்றிக் கொண்டேயிருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் பொருட்டு நண்பரின் (பிராமண நண்பர்) அறிவுரையின்படி இரண்டு புத்தகங்கள் வாசித்தேன். ஒன்று அழகிய மரம். தரம்பால் ஆங்கிலத்தில் எழுதி மகாதேவன் தமிழில் எழுதியது. மற்றொன்று பிரெஞ்ந்தியா (புதுச்சேரியில் கல்வி வளர்ந்த சூழ்நிலை. கீதா அவர்கள் அழகிய மரம் படித்து இருந்தால் உங்கள் கருத்தை இங்கே எழுதிட வேண்டுகின்றேன். உங்கள் கருத்து பார்த்து தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மீள் வருகைக்கு நன்றி. இந்த கருத்து இந்த பதிவுக்கு அப்பாற் பட்டது என்பதாலும், கீழே மேடம் அவர்கள் இதற்கு பதில் தந்து விட்ட படியினாலும் நான் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. எனினும் வாய்ப்பு அமையும்போது, நீங்கள் குறிப்பிட்ட அழகியமரம் என்ற நூலை வாசிப்பேன்.

      Delete
  18. கோவில்கள் எல்லாம் இன்று வணிகத் தலங்களாகி விட்டன ஐயா
    ஆங்கில வருடப் பிறப்பிற்கு அர்த்த சாமத்தில் பூசை நடக்கிறது,
    ஆனால் தமிழ் வருடப் பிறப்பு அன்று, ஏதுமில்லாமல், தமிழ் வருடப் பிறப்பு என்பதைக் கூட அறியாததுபோல் கோயில்கள் இயங்குகின்றன,
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  19. @ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு முதலில் என் நன்றி. ஆதங்கம் இருப்பது என்னமோ உண்மை தான்! ஆனால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதால் மட்டும் இல்லை. அதற்கேற்றாற்போல் பெரும்பான்மையானவர்கள் நடந்து கொள்ளுவதாலும் தான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருகிறது. என்றாலும் பிராமணர்கள் தங்கள் நிலையை அவர்களாகவே தாழ்த்திக் கொண்டு விட்டார்கள் என்பதிலும் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. மாற்றங்கள் பெரும்பாலும் பிராமண சமுதாயத்திலேயே ஏற்பட்டும் வருகிறது என்பதும் உண்மை.

    போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! அனைத்தும் கண்ணனுக்கே! என்னும் மனப்பாங்கு என்னிடம் இருப்பதால் மனோபலத்தை மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மையான பாரபட்சம் இல்லாத உங்கள் கருத்தை வரவேற்கின்றேன். நானும் கடவுள் நம்பிக்கை அதிகபட்ச அளவு இருந்து படிப்படியாக மாறி எதார்த்தம் புரிந்து நிச்சயம் நமக்கு மீறி ஏதோவொரு இயக்கம் அல்லது சக்தி அல்லது சூட்சமம் இருக்கின்றது என்பதோடு அதை விட்டு வெளியே வந்து விட்டேன். ஆனால் இன்று ஆன்மீகம் என்பது மக்களின் உண்மையான உழைப்பை காவு வாங்கிவிட்டது. குறுக்குவழிகளை அதிகப்படுத்திவிட்டது என்ற ஆதங்கம் எனக்குண்டு. பிராமணர்கள் மட்டுமல்ல. எந்த சாதியிலும் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல தங்களை தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்பவர்கள் தான் இங்கே அதிகம். எப்படி திரைப்பட நடிகர் நடிகைகள் செய்யும் காரியங்கள் உடனே வெளியே தெரிகின்றதோ அதைப் போல பிராமணர்கள் செய்யக்கூடிய ஒவ்வொன்றும்இங்கே பெரிதாகப் பார்க்கப்படுகின்றது. என் பார்வையில்தற்போது சாதியை அதிகம் தூக்கிப் பிடித்து இருப்பது இடை நிலை சாதிகளும், பொருளாதார ரீதியாக சற்று முன்னேறியவர்களும் தான். அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இவர்கள் இன்னமும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

      Delete
  20. ஜோதிஜி திருப்பூர், நான் "தரம்பால்" அவர்களின் பரம ரசிகை. ஆங்கிலத்தில் "ப்யூட்டிஃபுல் ட்ரீ" என்னும் பெயரிலேயே வந்திருக்கும் புத்தகத்தைத் தரவிறக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து வருவதோடு பலருக்கும் சிபாரிசும் செய்திருக்கிறேன். பெரியவர் ஜிஎம்பி ஐயா அவர்கள் பிராமணர் தவிர மற்றவர்க்குக் கல்வி மறுக்கப்பட்டது என்னும் பொருள்பட ஓர் பதிவு எழுதினபோது அதன் சுட்டியும் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். திறக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார்! திரு மகாதேவன் எழுதியவற்றைப் பற்றிய விமரிசனம் "தமிழ் இந்து" தளத்தில், (ஹிந்தி ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ் த இந்து இல்லை) படித்திருக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருப்பதைப் படிக்க வேண்டும் என்னும் தணியாத ஆவலும் இருக்கிறது. ஃப்ரெஞ்ச் இந்தியா படித்ததில்லை என்றாலும் அது குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரைக்கும் கல்வி என்பது எளியவர்களுக்கு மறுக்கப்பட்டது என்பது இன்று விவாத பொருளாக உள்ளது. நான் இன்னோரு விசயத்தை தேடிக் கொண்டிருந்தேன். சரி அப்படித்தான் இந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் கல்வித்திட்டம் இருந்தது என்றால் முழுக்க காவியங்கள் காப்பியங்கள் ஸ்லோகங்கள். மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் சமஸ்கிருதம் என்பது தெய்வபாஷை என்று சொல்லி அது குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே நின்றும் போனது. பல இடங்களில் அந்தப் புத்தகங்களில் என்னன்ன பாடத்திட்டம் எங்கெங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று விலாவாரியாக சொல்லியுள்ளார். எந்த நிலையும் 200 ஆண்டுகள் சுயசிந்தனை என்பதே வளராத அளவிற்கு வளர முடியாத அளவிற்கு மக்களின் கல்வியறிவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது என்பதனை வாசிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் தான் விஞ்ஞான அறிவு சுற்றியுள்ள நாடுகளில் பல விதமான மாற்றங்கள் உருவாக்க காரணமாக இருந்ததுள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

      Delete
  21. பிராகிருத மொழியிலும் கலப்புத் தமிழிலும் பேசி ஆட்சி புரிந்த மகேந்திர பல்லவன் காலத்தில் தமிழ் புத்துணர்ச்சி பெற்று பக்தி இலக்கியம் உருவானது. தமிழுக்கு பக்தி இலக்கியத்தை விட வேறு யாரும் தொண்டு செய்யவில்லை! வடமொழியைப் பேசியதால் நாட்டுக்குடிமக்களைத் தமிழில் பேசக் கூடாது என மகேந்திர பல்லவன் சொல்லியதாகவும் தெரியவில்லை. மன்னன் சைவ சமயம் திரும்பியதும் திருநாவுக்கரசர் அப்போது மாபெரும் சிறப்புடனேயே இருந்து வந்தார். ஞானசம்பந்தரும் அப்போது தான் தன் சிவத் தொண்டை தீந்தமிழில் பாமாலைகளாகப் புனைய ஆரம்பித்திருந்தார். அப்போது ஆரம்பித்து பாரதி, உ.வே.சா.வரை அனைவரும் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழ்ப்பண்டிதர்களே. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள்.

    மேலும் தமிழ்நாட்டில் பூணூல் தரித்தவர்கள் அனைவருமே பிராமணர்கள் என நினைக்கின்றனர். ஒரு சில ஸ்தபதிகள், பொன் ஆசாரிகள், தச்சர்கள் ஆகியோர் விஸ்வகர்மா எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் சம்ஸ்கிருத அறிவு இருந்தே வந்தது. அதிலும் ஸ்தபதிகள் எனப்படும் கல் தச்சர்களுக்கும், உலோக விக்ரஹங்கள் வடிப்பவர்களுக்கும் சம்ஸ்கிருத அறிவு இல்லை எனில் உளி பிடிக்க முடியாது. இவர்களும் செட்டியாரில் குறிப்பிட்ட இனத்தவரும் பூணூல் போட்டுக் கொள்வார்கள் என்பதோடு பிராமணர்களான எங்களைப் போல் ஆவணி அவிட்டத்தன்றும் பூணூல் மாற்றுவார்கள். இன்னும் வடநாடு போனால் க்ஷத்திரியர்களுக்கும் கட்டாயமாய்ப் பூணூல் உண்டு. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாருக்குமே உபநயனமும் இருந்து வந்தது என்பதை என்னுடைய "உபநயனம்" என்னும் நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது. பூங்கா அருகே ஒருவர் ஒரு வாழை இலையில் கைப்பிடி அளவு சோறு வைத்துள்ளார். அவரிடம் காசு வாங்கி ஒவ்வொருவரும் வாங்கிச் சென்று அருகே உள்ள சுவற்றின் மேல் வைக்கின்றார்கள். கூட்டம் அதிகமாகின்றது. ஒரு காக்கையும் வரவில்லை. இப்படித்தான் பூணூல் நிகழ்வும் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. ஆயிரத்தில் பத்து பேர்கள் மட்டுமே தங்கள் ஆத்ம திருப்திக்காக பலவற்றை இன்னமும் செய்து கொண்டிருக்கின்றார்கள். வணிக சிந்தனைகள் எல்லாவற்றையும் வணிகமாகவே மாற்றிவிட்டது.

      Delete
  22. பிராமணர்களை வடக்கே இருந்து வந்தவர்கள் எனில் சோழர்களை என்ன சொல்வது? சோழர்களின் பூர்விகம் வடநாடு தான். சூரிய வம்சம் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள். முன் காலத்தில் வடக்கே இருந்த நாடுகளைத் தவிர்த்துத் தெற்கே பாண்டிய நாடு மட்டுமே பரந்து விரிந்திருந்ததாகச் சொல்வார்கள். இந்தச் சோழர்கள் சிபியின் வம்சம் என்றும் சொல்லிக் கொள்வார்கள் அந்த சிபி யார் தெரியுமா?

    அந்த சிபி புறாவுக்காகத் தன்னையே அர்பணித்தப் பெருமை உடையவன். அவன் வழியில் வந்தவர்களே சோழ மன்னர்கள்.
    ஆனால் அவன் ஆண்ட இடம் தமிழகப் பகுதி அல்ல.
    அவன் ஆண்ட இடமே அவன் பெயரால் சிபி என்று அழைக்கப்படலாயிற்று. அவன் வம்சத்தில் வந்தவர்கள் சிபி, சிவி, சௌவிரர், சௌரதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.

    அவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே பரவி ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
    அப்படி தமிழ் நாட்டுப் பகுதிக்கு வந்து ஆட்சி அமைத்தவன் சோழ வர்மன். அவனை முன்னிட்டு அவன் சந்ததியர் சோழர்கள் என்றழைக்கப்பட்டனர்.

    சிபி என்னும் பெயரில் வேறு பெயர்கள், மஹாபாரதம், புராணங்களில் வந்தாலும், உசீனரன் மகனான, புறாவுக்காகத் தன் தசையை ஈந்த சிபி ஆண்ட இடம் சிந்து நதிப் பகுதி!!
    சிபி என்னும் பெயரில் ஒரு இடம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது.
    அங்குள்ள மக்கள் சிபி வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.

    ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
    புறாவுகாகத் தன் தசையைக் கொடுத்த அரசனான சிபி இந்த நாட்டை ஆண்டான் என்றும் எழுதியுள்ளார்.

    ஆகச் சோழர்களே வடக்கே இருந்து வந்தவர்கள் என்றிருக்க அவர்களைத் தமிழர்கள் இல்லைனு சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா பதிவு போல தூள் கிளப்பிட்டீங்க.

      Delete
    2. வரலாற்றில் நாம் கண்டு கொள்வதன் மூலம் ஐரோப்பா தவிர மற்ற கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாக போன்ற பெரும்நாடுகள் அனைத்தும் வந்தேறிகளின் தேசம். அப்பா ஒரு நாடு, அம்மா ஒரு நாடு, மகள் திருமணம் செய்தது ஒரு நாடு என்று கிளை பரப்பிக் கொண்டே செல்லும். மூலம் என்பதுஎங்கேயும் இருக்காது. ஜப்பானியர்களின் பத்து தலைமுறைகள் அதற்கு மேலே அவர்களின் மூதாதையர்களை இன்று வரையிலும் அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். இஸ்ரேல் கூட இந்த குடும்ப மரத்தை பொக்கிஷமாக பாதுகாக்கின்றார்கள். ஆனால் இந்தியாவின் நிலை வேறு. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மாறிமாறி வந்த படையெடுப்பாளர்கள் மூலம் என்னன்ன மாறுதல்கள் இங்கே உருவானது என்பதனை எவராலும் இங்கே உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் முழுமையாக ஆதாரங்கள் இங்கே இல்லை. நம் குடும்பத்தில் ஆறு தலைமுறைகள் வரைக்கும் கண்டவர் அவர்களைப் பற்றி முழுமையாக விபரங்கள் அறிந்தவர் லட்சத்தில் பத்துபேர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே. என்னால் எங்கள் குடும்பத்தில் நான்கு தலமுறைக்கு மேலே செல்ல முடியவில்லை. அவர்கள் யார்? எங்கேயிருந்தது வந்தார்கள்? யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இன கலப்பு உருவானதா? இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இங்கே யாருமே சுத்தமில்லை என்ற எளிய ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ள விசயம் தான் நமக்குக் கிடைக்கும்.

      Delete
    3. "இங்கே யாருமே சுத்தமில்லை என்ற எளிய ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ள விசயம் தான் நமக்குக் கிடைக்கும்."

      இது உண்மைதான். இதை அறிந்துகொள்ள நமக்கு ராக்கெட் சயன்ஸ் மூளை தேவையில்லை. கண்ணுக்கு முன்னால் இருக்கும் உதாரணம் சொல்கிறேன்.

      தமிழக பிராமணர்கள் கேரள எல்லையில் பாலக்காடு, கோயம்பத்தூரின் மேற்குப் பகுதியில் படர்ந்திருந்தனர். அவர்கள் பேசிய மொழி தமிழ். திருவனந்தபுரத்திலும் கேரளாவின் பல பகுதிகளிலும் தமிழ் மட்டும் பேசிய தமிழர்கள் பரந்துவிரிந்திருந்தனர் 10ம் நூற்றாண்டில். இப்போது அந்த இடங்களில் அவர்கள் பேசும் தமிழ் மொழி கொச்சையாகிவிட்டு, மலையாளம் அதிகமாக ஆகிவிட்டது. அவர்கள் உணவுப்பழக்கமும் மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டது.

      சென்னையில் இருந்த பல சமூகங்கள் தமிழர்கள் அல்லர், அவர்கள் தெலுங்கர்கள். இப்போதும் சென்னையில் மார்வாரிகள் அதிகம், ஆனால் அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் கலந்திருக்கின்றனர். இஸ்லாமியர்களிலும், 'தமிழ் முஸ்லீம்', 'உருது முஸ்லீம்' போன்ற பல பிரிவுகள் உண்டு (கலப்பினத்தால்)

      நாகர்கோவில் போன்ற இடங்கள், மலையாள ஆதிக்கமும் அதற்கான பழக்கங்களும் அதிகம். தமிழ்னாட்டில் வசிப்பதால் அவர்களையும் நாம் தமிழர்கள் என்றுதான் குறிப்பிடுகிறோம்.

      ஆனால் கட்டுரையில், குறிப்பிட்டிருந்த "தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக் குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை" வரிகள் பிள்ளை அவர்களின் ஒரு சார்பான, அல்லது his agenda கருத்தாகத் தெரிகிறது. இதற்கு நிறைய பதில் எழுதலாம், ஆனால் கருத்தைப் பார்க்காமல், அது தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

      Delete
    4. மேலே களத்தில் கருத்துரையாடல் மூலம் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, மேடம் அவர்களுக்கும், ஜோதிஜி அவர்களுக்கும் நன்றி. பிராமண எதிர்ப்பு, பிராமணர்களின் விழிப்புணர்வு, பிராமணர் அல்லாதா மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப் பட்டமை, மகேந்திரவர்மன், பிராமணர் அல்லாத மற்றவர்கள் பூணூல் அணிந்தமை, குடும்பமரம் என்று பல்வேறு தகவல்கள்.

      // நம் குடும்பத்தில் ஆறு தலைமுறைகள் வரைக்கும் கண்டவர் அவர்களைப் பற்றி முழுமையாக விபரங்கள் அறிந்தவர் லட்சத்தில் பத்துபேர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே. என்னால் எங்கள் குடும்பத்தில் நான்கு தலமுறைக்கு மேலே செல்ல முடியவில்லை. அவர்கள் யார்? எங்கேயிருந்தது வந்தார்கள்? யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இன கலப்பு உருவானதா? இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இங்கே யாருமே சுத்தமில்லை என்ற எளிய ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ள விசயம் தான் நமக்குக் கிடைக்கும். //

      என்ற ஜோதிஜி அவர்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்றைய நிலையில், இந்தியாவில் நாம் நமது சாதிச் சான்றிதழில் எவ்வாறு குறிக்கப் பட்டு இருக்கிறமோ அந்த ஜாதிதான். மதமாற்றம் என்பது போல ஜாதிமாற்றம் என்பதற்கும் சட்டத்தில் அனுமதி இருக்குமானால் இங்கே நிறையபேர் மாறி விடுவார்கள்.

      “நாலாம் தலைமுறையைப் பார், நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

      Delete
    5. மேலும் மேலே மீள் வருகை தந்து கருத்துரை தந்த நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி.

      இன்று யார் ஒரிஜினல் தமிழன் என்று அறிய முடியாதபடி இனக்கலப்பு உண்டாகி விட்டது.

      நீங்கள் டாக்டர் கே.கே பிள்ளை அவர்களது நூலை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டு இருப்பதாலேயே, ஒருபக்கச் சார்பு என்று நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை. இப்போது அந்த நூலை பிற தனியார் புத்தக பதிப்பாளரும் பதிப்பித்து இருக்கிறார்கள்.
      வாய்ப்பு கிடைத்தால் இந்த நூலை முழுமையாக வாசித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

      Delete
  23. ஆகம விதிகள் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு நடைபெறும் கேலிக்கூத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆஸ்திகர்களே அதனைக் கண்டு கோபப்படும் அளவு தற்போது நிலை உள்ளது. எந்த நிலைப்பாட்டுக்கும் குறை கூறும் பிரிவினர் ஒரு பக்கம். அவர்களை எந்த காலகட்டத்திலும் திருப்திப்படுத்த முடியாது. இந்நிலையில் நமக்குப் பொருத்தமாயின் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிடில் புறந்தள்ளுவோம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களது கருத்தினுக்கு நன்றி.

      Delete
  24. துளசி : உங்கள் பதிவும் இங்கு அதனால் எழுந்த கருத்துப் பரிமாற்றங்களும் பல தகவல்களை அறியத் தந்திருக்கின்றன.

    கீதா:நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கே கே பிள்ளை அவர்களின் நூலை இங்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு லைப்ரரியில் வாசிக்க நேர்ந்தது. முழுவதும் வாசிக்க முடியவில்லை...அடுத்த முறை சென்ற போது அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்து வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள் போலும்...வேறு காப்பிகளும் காணவில்லை.... வீட்டிற்கு எடுத்துவர முடியாது அங்கிருந்தே வாசிக்க வேண்டும் என்பதால்... இது விவாதத்திற்கு உரிய கருத்துகள். நான் சொல்ல நினைத்த சில பல கருத்துகளை ஜீவி அண்ணா, நெல்லைத்தமிழன், ஸ்ரீராம், கீதா அக்காவும், ஜோதிஜி அவர்களும் சொல்லியிருக்கிறார்கள். கீதா அக்கா கொடுத்திருக்கும் வரலாறு குறித்த பல கருத்துகளை இப்போது அறிந்தேன். நல்ல விவாதங்கள் ஆழ்ந்த கருத்துப் பூர்வமான விவாதங்கள் அனைத்துமே வர வேற்கத் தக்கதே. என்றாலும் இங்கு ஒரு சில பேசினால் சில சமயம் அது விவாதமாக இல்லாமல் சச்சரவாக மாறிவிடுவதால் தயக்கமாகவே இருக்கிறது சகோ.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கு வந்து கருத்துரை தந்த நண்பர் ஆசிரியர் தில்லைக்கது துளசிதரன் அவர்களுக்கும் மற்றும் சகோதரி கீதா அவர்களுக்கும் நன்றி. நான் இன்று மதியம் திருச்சிடவுன் பக்கம் சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். இனிமேல்தான் மேலே உள்ள அன்பர்களின் கருத்துரைக்கு மறுமொழி சொல்ல வேண்டும்.

      சகோதரி கீதா அவர்களே,

      // நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கே கே பிள்ளை அவர்களின் நூலை இங்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு லைப்ரரியில் வாசிக்க நேர்ந்தது. முழுவதும் வாசிக்க முடியவில்லை...அடுத்த முறை சென்ற போது அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்து வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள் போலும்...வேறு காப்பிகளும் காணவில்லை.... வீட்டிற்கு எடுத்துவர முடியாது அங்கிருந்தே வாசிக்க வேண்டும் //

      என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். கவலைப்பட வேண்டாம். “தமிழ் இணையக் கல்விக் கழகம் ( Tamil Virtual University )” – என்ற இணையதளத்தில் இந்த நூல் முழுவதையும் முழுமையாக வாசிக்கலாம். உங்களுக்கான வழித்தடம் இதோ:

      http://www.tamilvu.org > நூலகம் > நூல்கள் > இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்) > வரலாறு > தமிழக வரலாறு > தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் - கே.கே. பிள்ளை

      // நல்ல விவாதங்கள் ஆழ்ந்த கருத்துப் பூர்வமான விவாதங்கள் அனைத்துமே வர வேற்கத் தக்கதே. என்றாலும் இங்கு ஒரு சில பேசினால் சில சமயம் அது விவாதமாக இல்லாமல் சச்சரவாக மாறிவிடுவதால் தயக்கமாகவே இருக்கிறது சகோ //

      சகோதரி அவர்களே, என்னதான் தமிழ், தமிழன் என்றாலும் ஜாதி, மதம் என்று வந்துவிட்டால் தமிழர்கள் தன்னிலை மறந்து விடுவார்கள்; அதன் எதிரொலியை இங்கு வலையுலகிலும் காணலாம். நான் எனது வலைத்தளத்தில் அனானிகளுக்கு இடம் கொடுப்பதில்லை; அப்படியும் சிலர் வரம்புமுறை கடந்து எழுதினால் நீக்கி விடுவது வழக்கம்.

      Delete
  25. உங்களது பதிவு, ஒரு ஆக்கபூர்வமான இன்னொரு பதிவை திருமதி கீதா சாம்பசிவத்திடமிருந்து கொண்டு வந்ததால், நிறைய விஷய / கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. நல்லது. (அங்கே படித்துவிட்டு இங்கே வந்தேன்.)

    @ ஜீவி //எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போகும் பொழுது, எண்ணங்களில் கனல் தகிக்கும் பொழுதும் அதை நீரூற்றி அணைக்கவே நமக்கு நாமே ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமோ என்றும் சோர்வுற வேண்டி உள்ளது.//

    உடன்படுகிறேன்.

    @ நெல்லைத்தமிழன்: // டாக்டர் கே.கே.பிள்ளையது நோக்கு ஒரு சார்பு உடையது என்பதை தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். //

    கவனிக்கவேண்டிய சங்கதி!

    @ஜோதிஜி, திருப்பூர்: // என் பார்வையில்தற்போது சாதியை அதிகம் தூக்கிப் பிடித்து இருப்பது இடை நிலை சாதிகளும், பொருளாதார ரீதியாக சற்று முன்னேறியவர்களும் தான். அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இவர்கள் இன்னமும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.//

    இவர்கள் தொங்கிக்கொண்டிருப்பதின் சூட்சுமத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதில்தான் இருக்கிறது இவர்களது அரசியல்; ஆதாயம். எனவே, ’ஒழியவேண்டும்’ எனக் கோழிக்கூப்பாடு போட்டுக்கொண்டே, தொங்கிக்கொண்டிருப்பார்கள் காலமெலாம்..

    @கீதா சாம்பசிவம்: பின்னூட்டம் அவரது தளத்தில்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய ஏகாந்தன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன பிறகுதான் மேடம் அவர்கள் எழுதிய பதிவு பற்றி தெரியும். தகவலுக்கு நன்றி. மேலே சொன்ன எனது மறுமொழிகளே உங்களுடைய இந்த கருத்துரைக்கு பதில் சொல்லுவன.

      Delete
  26. அருமையான அலசல் ! த ம 7

    ReplyDelete
  27. // இறைவன் சன்னிதானத்தில் மேளம் கொட்டுதல், பாட்டு பாடுதல் மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது என்பது சம்பந்தப்பட்ட கலைஞர்களாலேயே நிகழ்வுறும். ஆனால் இப்போதோ பதிவு செய்யப்பட்ட மேள சத்தத்தை, அர்ச்சனை மணி ஓசையை கோயில்களில் ஒலி பரப்புகிறார்கள்.// இன்றளவும் இங்கே ஶ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் வாத்தியக் கலைஞர்கள் இருந்து வருகின்றனர். மதுரை போன்ற பெரிய கோயில்களிலும் இருப்பார்கள் என நம்புகிறேன். ஏனெனில் நான் மதுரை குறித்தும் கோயில் குறித்தும் தற்கால நிகழ்வுகளை அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. கிராமங்களிலும் சின்னச் சின்னக் கோயில்களிலும் நாதசுரக் கலைஞர்கள் இல்லை என்பது உண்மை தான். நான் மேலே சொன்ன எங்கள் புராதன ஊரான பராவாக்கரை பெருமாள் கோயிலிலும் நீங்கள் சொல்லி இருக்கும் மின்சாரத்தால் இயங்கும் வாத்திய ஒலியே வழங்கி வருகின்றனர். கிராமங்களில் நாதசுரக் கலைஞர்கள் வசிப்பதில்லை இப்போது. தேடிக் கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. என் மாமனார் வசித்த கருவிலியில் மேளகாரத் தெரு என்றே ஓர் தெரு இருந்தது; இன்னமும் இருக்கிறது. ஆனால் ஒரு மேளக்காரர் கூட இப்போது அங்கே இல்லை. நாதசுரக் கலைஞர்கள் அதற்குச் சொல்லும் காரணத்தைக் கேட்டால் அதிசயித்துப் போவீர்கள்! :)

    ReplyDelete
  28. வாசக நண்பர்களுக்கு, இந்த பதிவு சம்பந்தமாக, மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் மேலே தான் சொன்ன கருத்துரைகளையே ஒரு பதிவாக்கி எழுதி இருக்கிறார். (http://sivamgss.blogspot.in/2017/10/blog-post_7.html திரு தமிழ் இளங்கோவுக்கு என்னுடைய பதில்! ) இந்த பதிவினில், எனது பின்னூட்டமாக, மேலே எனது பதிவினில் சொல்லப்பட்ட எனது மறுமொழிகளையே அங்கும் தொகுத்து பின்னூட்டமாக தந்து,

    // மேலும் இதற்கான மறுமொழிகளை நீங்கள் எனது பதிவினில் சொல்லி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். இனிமேல்தான் அவற்றை படிக்க வேண்டும். வாதப் பிரதி வாதங்கள் குறித்து நான் அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இதனால் வலைபதிவர்கள் என்ற முறையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.. எப்போதும் உங்கள் வலைத்தளத்தினை தொடர்கின்றேன். நன்றி //

    என்று முடித்து இருக்கிறேன். ( இது ஒரு தகவலுக்காக மட்டும் )

    ReplyDelete
    Replies
    1. ஐயா, தனிப்பட்ட முறையில் உங்களுக்கோ, எனக்கோ எவ்விதமான மனவேறுபாடுகளும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். இதுவே வேறு யாரும் எழுதி இருந்தால் படிச்சுட்டுப் போய்க் கொண்டே இருந்திருப்பேன். இங்கே என் எண்ணங்களைப் பகிரலாம் என்றதால் பகிர்ந்தேன். மற்றபடி உங்கள் மீது எனக்கு எப்போவும் மரியாதையும் மதிப்பும் உண்டு! அது தொடர்ந்து இருக்கும். எப்போதும் வந்து உங்கள் பதிவுகளில் கருத்துச் சொல்ல முடியாவிட்டாலும் அவ்வப்போது வந்து இம்மாதிரியான சில பகிர்வுகளில் என் கருத்துக்களைப் பகிர்வேன். என்னைப் பொறுத்துக் கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி. வணக்கம்.

      Delete
    2. என்னுடைய பதிவின் கருத்துக்களுக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என் பதிவுக்கு வந்து உங்கள் கருத்தை தாராளமாகப் பகிரலாம். நல்வரவு.

      Delete
  29. கேரளத்தைப் பொறுத்த வரையில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகராக இருப்பது என்பது 100 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது எனலாம்.
    குடும்ப கோயில்கள் என்பது கேரளத்தில் சாதாரணம். இக்குடும்ப கோயில்களில் அர்ச்சகர் என்று தனியாக நியமிக்கப் படுவதில்லை. இவை பெரும்பாலும் இந்துக் கோயில்கள் என அறியப்பட்டாலும் பெரும்பாலும் பகவதி என்ற பெண் தெய்வமே பிரதானமாக இருக்கும். அர்ச்சனை மற்றும் வழிபாடு நாம் நம் வீட்டில் செய்வது போன்று வீட்டின் மூத்த தலைவர் அல்லது தலைவி செய்வார்கள்.

    தீண்டாமை மிகவும் தீவிரமாக இருந்த காலத்தில் நாராயண குரு என்ற சீர்திருத்த பெரியவர் இந்து மதத்தின் மற்ற கடவுள்களுக்கான பல கோயில்கள் நிறுவினார். திருவனந்தபுரத்தை அடுத்து அருவிப்புறம் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்றையும், வாழமுட்டம் என்ற இடத்தில் குன்னும் பார என்ற இடத்தில் முருகன் கோயிலும் கட்டி தீண்டாதோர் என்று கருதப்பட்ட ஈழவர் இனத்தவரை அர்ச்சகர்களாக நியமித்தார். சமஸ்க்ரித அர்ச்சனையை மலையாளத்தில் மொழி பெயர்த்து உதவினார்.

    ஆகவே தற்போதைய செய்தி (பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவது) என்பது ஒரு அரசு பூர்வமான அங்கீகாரம் என்பதே. இந்து அறநிலையத்துறை என்பது அரசின் ஒரு அங்கம் என்பதால் தற்போது நியமிக்கப்பட்டவர்கள் அரசு ஊழியர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்கும் transfer, பென்ஷன் போன்ற அரசு விதிகள் உண்டு.

    கேரளத்தில் உள்ள பெரும்பாலும் கோயில்களில் உள்ள பூஜகர் (பிராமணரும், அல்லாதோரும்) பலரும் தாந்த்ரீக முறைப்படி பூஜை செய்பவர்கள், இவற்றில் மந்த்ரத்தைக் காட்டிலும் சைகைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆகம விதிகள் பற்றி அறிவுடையோர் மிகச் சிலரே.

    எல்லா விதிகளும் தெய்வம் கூறியது என்று மனிதர்களால் கூறப்பட்டவை. கண்ணப்பநாயனார் தொழுதது போன்றும் தெய்வத்தை தொழலாம். அப்போது ஆகம விதிகள் வருவதில்லை.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. //கேரளத்தைப் பொறுத்த வரையில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகராக இருப்பது என்பது 100 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது எனலாம்.
      குடும்ப கோயில்கள் என்பது கேரளத்தில் சாதாரணம். இக்குடும்ப கோயில்களில் அர்ச்சகர் என்று தனியாக நியமிக்கப் படுவதில்லை. இவை பெரும்பாலும் இந்துக் கோயில்கள் என அறியப்பட்டாலும் பெரும்பாலும் பகவதி என்ற பெண் தெய்வமே பிரதானமாக இருக்கும். அர்ச்சனை மற்றும் வழிபாடு நாம் நம் வீட்டில் செய்வது போன்று வீட்டின் மூத்த தலைவர் அல்லது தலைவி செய்வார்கள்./தமிழ்நாட்டில் குலதெய்வக் கோயில்கள் என்போம். அதைத் தான் நீங்கள் குடும்பக் கோயில் என்கிறீர்கள். அங்கே எல்லாம் பூசாரிகள் தான் வழிபடுபவராக இருப்பார். குடும்பத் தலைவிக்கே முன்னுரிமை என்பதும் உண்டு. இங்கேயும் பெரும்பாலான குலதெய்வக் கோயில்களில் பெண் தெய்வங்களே இருப்பார்கள். மாரியம்மன், ஆலையம்மன், பச்சையம்மன், காளியம்மன், ரேணுகா தேவி, திரௌபதி அம்மன் போன்ற பலர்! ஒரு சில ஆண் தெய்வங்களும் உண்டு. முனிசாமி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவார். ஐயனார், சாத்தன் என்னும் பெயரிலும் வேறு பல பெயர்களிலும் வருவார். கருப்பு என்னும் கடவுள் கருப்பண்ணனாகவும் கருப்பண்ணசாமியாகவும் வருவார். சிவன் சுடலையாண்டியாக வருவார். இவர்களைக்குறித்த கதைகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும்.

      Delete
    2. //கேரளத்தில் உள்ள பெரும்பாலும் கோயில்களில் உள்ள பூஜகர் (பிராமணரும், அல்லாதோரும்) பலரும் தாந்த்ரீக முறைப்படி பூஜை செய்பவர்கள், இவற்றில் மந்த்ரத்தைக் காட்டிலும் சைகைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆகம விதிகள் பற்றி அறிவுடையோர் மிகச் சிலரே.//

      ஆம், சக்தி வழிபாடு பெரும்பாலும் தாந்த்ரீக முறைப்படியே செய்யப்படும், கேரளத்தில் பகவதி அம்மன் பிரதானம் என்பதால் தாந்த்ரீக வழிபாடு. ஆகம விதிகளுக்கும் அங்குள்ள இந்தக் கோயில்களுக்கும் சம்பந்தம் இல்லை தான். தமிழ்நாட்டில் மட்டுமே நான் அறிந்தவரையில் ஆகம விதிகளின்படி கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை வெறும் கட்டுமானம் பற்றி மட்டும் குறிப்பிடுவன அல்ல! மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலஸ்தான விக்ரஹம் அளவில் இருந்து மூலஸ்தானத்தின் எந்த இடத்தில் அது இருக்க வேண்டும் என்பதில் இருந்து அதற்கு நேர் மேலே வரும் கருவறை விமானத்தின் உச்சி எப்படி இருக்கவேண்டும் என்பதில் இருந்து கணக்கு இருக்கிறது. மேலும் இது சரீரத்தில் உள்ள ஒவ்வொரு யோகநிலையையும் கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு நம் உடலின் மூலாதாரத்தில் இருந்து ப்ராகாரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு நம் உடலின் உச்சந்தலையின் சஹஸ்ராரச் சக்கரத்தை நினைவூட்டும் வகையில் கருவறை அமைக்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பிரகாரங்கள் ஒன்பது (மிக அரிதாக) ஏழு, ஐந்து என்னும் கணக்கில் வரும். இவை வெறும் புள்ளி வைத்து அளந்து கணக்கில் எடுத்துக் கொள்பவை மட்டும் அல்ல!

      Delete
    3. //எல்லா விதிகளும் தெய்வம் கூறியது என்று மனிதர்களால் கூறப்பட்டவை. கண்ணப்பநாயனார் தொழுதது போன்றும் தெய்வத்தை தொழலாம். அப்போது ஆகம விதிகள் வருவதில்லை.//

      கண்ணப்ப நாயனார் செய்தது ஆத்மார்த்தமான தொழுகை! எல்லோருக்கும் எளிதில் கிட்டாதது. அதற்கெல்லாம் ஆகமம் எங்கிருந்து வரும்? அப்படிப் பார்த்தால் பூசலார் நாயனார் மனதிற்குள் கட்டிய இருதயாலீஸ்வரர் கோயிலும் அப்படித் தானே! ஆனால் மனதிலேயே அவர் ஆகம விதிகளுக்கு உட்பட்டே கட்டினார். ஆகவே இறைவன் அங்கே குடி கொண்டான். :) வட மாநிலங்களில் உள்ள கோயில்களில் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள கோயில்கள், அதன் வழிபாடுகள் எல்லாமும் தமிழ்நாட்டு மரபை ஒட்டி இருக்கும். கோயில் திறக்கும் நேரம் மூடும் நேரம், வழிபாடுகள் செய்வது எல்லாமும் ஒத்து வரும். அதுவே மேற்குக் கடலோரம் குஜராத் வரை வேறே மாதிரி. நடுவே சென்றோமானால் காசி, நர்மதா நதி தீரக் கோயில்கள், அலஹாபாத், பிரயாகை, ஹரித்வார், குருக்ஷேத்திரா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற இடங்களில் வேறு மாதிரி.

      Delete
    4. நண்பர் ஜே.கே அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அவ்வப்போது ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ நாராயணகுரு போன்ற பெரியவர்கள் இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் செல்வாக்கு செலுத்தும் சனாதனிகள் கைகள் ஓங்கி விடுவதால், அவை முற்றுப் பெறாமல் போய் விடுகின்றன.

      //ஆகவே தற்போதைய செய்தி (பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவது) என்பது ஒரு அரசு பூர்வமான அங்கீகாரம் என்பதே. இந்து அறநிலையத்துறை என்பது அரசின் ஒரு அங்கம் என்பதால் தற்போது நியமிக்கப்பட்டவர்கள் அரசு ஊழியர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்கும் transfer, பென்ஷன் போன்ற அரசு விதிகள் உண்டு.//

      என்ற தகவலைத் தந்தமைக்கு மீண்டும் நன்றி. கண்ணப்பன் ’ஊனுக்கு ஊன் இடுதலே உசிதம்’ என்ற முரட்டு வழிபாடு செய்தவன்.

      Delete
  30. /
    மேலே சொல்லப்பட்ட மேற்கோளில் இன்றைய சூழலில் யார் தமிழ் பிராமணர்கள் அல்லது யார் அயல்நாட்டு பிராமணர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம்./இக்காலத்தில் யாருமே பிராமாணர்கள் அல்ல என்பதே என் கருத்து திருமதி கீதாவின்பதிவில் பின்னூட்டமாய் எழுதி இருக்கிறேன் முதலில் அதைப் பார்த்ததால் வந்த விளைவு

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அங்கும் இந்த கருத்து அடங்கிய உங்களது கருத்தினைப் படித்தேன். இதே கருத்தினை உங்களது முந்தைய பதிவுகளிலும் படித்ததாக நினைவு.

      Delete