Tuesday 4 October 2016

சசிகலா – துணைமுதல்வர் ஆக வாய்ப்பு



சென்ற மாதம் (செப்டம்பர். 2016) 22 ஆம் தேதி முதல், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பால்கனிப் பாவை:                                                                                                                    

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ரசிகர்களுக்கும், அரசியல்வாதியாக மாறியவுடன் தொண்டர்களூக்கும், அடிக்கடி பால்கனியில் இருந்து காட்சி தருவார்; கையை அசைப்பார். இது என்.டி.ராமராவ் ஸ்டைல். இதனால் இவரை ‘பால்கனிப் பாவை’ என்றே அப்போது சொன்னார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ICU- வில்இருக்கும் அவர், மருத்துவமனை வாசலில் காத்து இருக்கும் தொண்டர்களை இதுவரை பார்க்க முடியாத நிலைமையில் அவரது உடல்நிலைமை இருக்கிறது.

சாதாரணமாக மருத்துவமனையில் ICU- வில் இருப்பவர்களை மற்றவர்கள் சென்று பார்க்க அனுமதி இல்லை; ரொம்பவும் வேண்டப்பட்டவர்களை மட்டும், கதவில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி வழியேதான் பார்க்க அனுமதிப்பார்கள். 

( மேலே படம் – நன்றி நக்கீரன்..இன்)

நேற்று மாலை (03.10.16) அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள நான்காவது மருத்துவ அறிக்கையில் முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், கிருமி தொற்று மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட (respiratory support) சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில் சுவாசம் சம்பந்தப்பட்ட respiratory support என்பதனை ‘செயற்கை சுவாசம்’ என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

துணைமுதல்வர் பதவி:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 02.10.16 அன்று மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக செய்தி. மேலும் அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களையும் சென்னைக்கு வரச் சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதா முழு குணம் அடையும் வரை, அரசு நிர்வாக எந்திரத்தை நடத்திடவும், எதிர்க்கட்சியினரின் சில கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முதல்வரின் நெருங்கிய தோழி சசிகலா அவர்களை துணை முதல்வராக தேர்ந்தெடுக்கும் படியான அரசியல் சூழ்நிலை, அ.தி.மு.கவில் அமையும் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவும், அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு, சசிகலா தேர்தலில் போட்டியிட வசதியாக தஞ்சை தொகுதிக்கு தேர்தல்தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர் கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசுக் கட்டிலில் இருக்கும் பி.ஜே.பியின் ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படை.  எதுவும் நடக்கலாம்.


( மேலே படம் – நன்றி: விகடன்.காம் )
                                                                                 
ஒரு பாடல்:

’முத்துச்சிப்பி’ என்றொரு படம். ஜெய்சங்கர் - ஜெயலலிதா நடித்தது. அந்த படத்தில் ”தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக’ … என்று தொடங்கும் ஒரு பாடல்.  எழுதியவர் கவிஞர் வாலி. இந்த படம் வந்த ஆண்டு 1968. அப்போது எழுதப்பட்ட இந்த பாடல் காட்சியில் ஜெயலலிதாவையும், அம்மனையும் மாறி மாறி காட்டி பாடல் அம்மனுக்கா அல்லது அம்மாவுக்கா என்று வித்தியாசம் காண முடியாதபடி படமாக்கி இருப்பார்கள். இந்த பாடலை ஜெயா டிவியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். பாடல் இதோ 

(நன்றி – யூடியூப்) 

அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய் … எங்கள் தாய் …

தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக …
கண் பட்ட இடம் பூ மலரும் … பொன் மகளே வருக …
பொன் மகளே வருக … நீ வருக!

கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலந்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்டவள் நீயே 
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே  
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே …
முத்து மாரியென்பது நீயே … முத்து மாரியென்பது நீயே …

இதயம் உன்னைப்பாடும் …
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே …
ஒரு தலைவியாகிய தாயே!!

(திரைப்படம்: முத்துச்சிப்பி (1968) பாடல்: வாலி  / பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் / இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு)

22 comments:

  1. தங்களின் தனிப்பாணியில் பதிவு கொடுத்து, பொருத்தமான பாடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.

    மாண்புமிகு தமிழக முதல்வர், விரைவில் பரிபூர்ண குணமடைந்து திரும்பிட இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முதலவர் ஜெயலலிதா முழுகுணம் அடைந்து மீண்டும் பணிக்கு வரவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும்.

      Delete
  2. முதல்வர் முழுமையாய் விரைவில் குணமடைந்து ஆட்சிப்பணிக்கு திரும்ப விழைகின்றேன்.
    மற்றபடி தாங்கள் தந்திருக்கும் தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. காத்திருப்போம் நடப்பதைக் காண!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ளம் கொண்ட V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் படித்த, மக்களிடையே கேட்ட மற்றும் நம்பத் தகுந்த அரசியல் நண்பர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஸ்கூப் (Scoop) கட்டுரையை எழுதியுள்ளேன்.வேறொன்றும் இல்லை.

      Delete
  3. முதல்வர் அவர்கள் விரைவில் பூரண நலமடைந்து இல்லம் திரும்ப வேண்டுவோம்..

    ReplyDelete
    Replies
    1. ’தஞ்சையம்பதி’ சகோதரரின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. அரசியலில் எதுவும் நடக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. அவ்வ்வ்வ் இது சினிமா பாட்டா ?இதுநாள் வரையில் எனக்கு தெரியாமல் போச்சே :)

    ReplyDelete
    Replies
    1. இது சினிமாப் பாட்டு என்பது, நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு இதுநாள் வரை தெரியாதது ஆச்சரியமான விஷயம்தான்.

      Delete
  7. முதல்வர் குறித்த வதந்திகள் அதிகரித்து வரும் நிலையில் எதாவது மாற்று ஏற்பாடுகள் நடந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லதுதான்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. மரியாதை நிமித்தம் மனிதம் வழியும் பதிவு ..
    தம +
    இப்போ முகநூலில்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

      Delete
  9. பொருத்தமான பாடலுடன் பதிவு அரசியல் காரம் மசாலா அதிகம் இன்றி சொல்லிச் சென்ற விதம் அருமை. அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம். வதந்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டிருக்கிறது. எப்படியோ தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் சரி. நல்ல ஆட்சியாளர் அமைந்தால் நல்லது. இப்போது சொல்லப்படும் மாற்று ம்ம்ம்ம் சரி விடுங்கள் ஐயா அதைப்பற்றி வேண்டாம்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது சொல்லப்படும் மாற்று என்பது பரவலாக சொல்லப்படும் கருத்துரையின் எதிரொலியே. அதிலும் அநேக சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

      Delete
  10. அரசியலில் எதுவும் சாத்தியம்..... என்ன நடக்கிறது/நடக்கப் போகிறது என்பது தெரிந்து கொள்ள அனைவருமே காத்திருக்கிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. சசிகலா துணைமுதல்வர் ஆக இல்லை, தமிழக முதல்வராகவே வர முயற்சிகள் நடப்பதாக வெளிநாட்டில் தமிழ் மக்கள் பலர் பேசி கொள்கிறர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. ji now you will agree that sasikala is not in the race...
    the candidates are announced for byeelection...

    ReplyDelete