Sunday 29 May 2016

சிலந்தி லில்லி ( Spider Lily )



சில தினங்களுக்கு முன்னர் திரு G.M.B அய்யா அவர்கள் தனது வலைத்தளத்தில் மலரே மலரே வாசமில்லா மலரே என்ற தலைப்பினில் பதிவு http://gmbat1649.blogspot.in/2016/05/blog-post_14.html ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பூத்த அதிசய மலர் ஒன்றினைப் பற்றி படங்களுடன் வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து நானும் எங்கள் வீட்டுத் தோட்டதில் மலர்ந்த ஒரு பூச்செடியைப் பற்றி இங்கு சொல்லப் போகிறேன். 

லில்லி:

நாங்கள் புறநகர் பகுதியில் புதுவீடு கட்டி வந்த சமயத்தில் (1998) வீட்டு முகப்பில், காம்பவுண்டு சுவருக்குள்  நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தோம். என்னதான் தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டாலும், எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். தண்ணீரின் ஈரம் பூமியில் காய்ந்து, சில சின்ன செடிகள் பட்டு போய் விட்டன. இப்படி பட்டுப்போன செடிகளில் வெள்ளை நிற லில்லி செடியும் ஒன்று..இதனை விற்ற நர்சரியில் ஆப்ரிக்கன் லில்லி என்று சொல்லி கொடுத்தார். இதில் நீலம் அல்லது வெள்ளை நிறப் பூக்கள் பூப்பவை என்று இருவகை உண்டு. எங்கள் வீட்டில் இருந்தது வெள்ளை லில்லி. 

சில வருடங்கள் கழித்து, ஒரு மழைக்காலத்தில் (2014) மறுபடியும் அந்த செடி துளிர்த்தபோது, ஒருவித புழுக்கள் செடியைக் கடித்து குதறிக் கொண்டு இருந்தன. உடனே செடியைக் காப்பாற்ற வேண்டி, வீட்டில் இருந்த கொசுமருந்தை (Sprayer) செடிகள் மீதும், புழுக்கள் மீதும் தெளித்தேன். புழுக்கள் செத்து விட்டன; கூடவே அடுத்தநாள் செடியும் பாதி பட்டு போய், அப்படியே முழுதும் அழிந்து விட்டது. (நான் நர்சரி கார்டனில் போய் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்) (படங்கள் கீழே)2014







மழைக்காலத்தில்:

அப்புறம் இந்த செடி சில மாதங்களாக கண்ணில் தென்படவில்லை. சென்ற ஆண்டு (2015) மழைக்காலத்தில் மீண்டும் துளிர்விட்டு சில பூக்களை பூத்தது. (படங்கள் கீழே)








 இந்த ஆண்டு (2016) கடும் வெயில் காரணமாக காய்ந்து போயிருந்த இந்த செடி, அண்மையில் பெய்த கோடைமழையால் துளிர்த்து விட்டது முதலில் ஒரு பூ மட்டும் பூத்து இருந்தது. அப்புறம் ஐந்தாறு பூக்கள்.. பூப்பதும் உதிருவதுமாக இருக்கின்றன. எனவே தரையில் இருக்கும் இந்த செடியைக் காப்பாற்ற. மண் நிரப்பிய  சிமெண்டு பூத்தொட்டிக்குள் மாற்றி விடலாம் என்று இருக்கிறேன். (படங்கள் கீழே)











செடி பற்றிய விவரங்கள்:

வழக்கம் போல கூகிளில் தேடியபோது இதே செடியைப் போன்ற இலைகள் கொண்ட செடியின் விவரம் கிடைத்தது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இதன் தாவரப் பெயர் agapanthus-africanus என்று தெரிய வந்தது. www.boethingtreeland.com/agapanthus-africanus-peter-pan-white.html ) ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள பூக்களின் படங்களுக்கும், எங்கள் வீட்டில் உள்ள செடியில் உள்ள பூக்களின் படங்களுக்கும் வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. எங்கள் வீட்டில் உள்ள செடி முழுமையாக, உயரமாக வளர்ந்து பூத்தால்தான் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு வகையா என்பதும், இது எந்த வகை ஆப்பிரிக்கன் செடி என்ற விவரமும் தெரிய வரும். விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம்.

பிற்சேர்க்கை – ( 01.06.2016 – 22.36) ஸ்பைடர் லில்லி

மரியாதைக்குரிய வலைப்பதிவர்கள் திரு V.N.S (வே.நடனசபாபதி) சகோதரி கீதமஞ்சரி மற்றும் தளிர் சுரேஷ்  மூவரும் கீழே பின்னூட்டங்களில் தமது கருத்துக்களை சொல்லியுள்ளார். மூவருக்கும் நன்றி.
இவற்றுள் சகோதரி கீதமஞ்சரி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ள     ( www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html ) Long Flowered Spider Lily என்ற படம் பொருத்தமானதாக உள்ளது. அவருக்கு மீண்டும் நன்றி. எனவே மேலே பதிவிலும் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன். நண்பர்கள் மன்னிக்கவும். அதில் உள்ள படங்கள் கீழே.



படங்கள் – மேலே நன்றி: flowersofindia.net

இன்று (01.06.16) எனது அம்மா வழி உறவினர் ஒருவரது வீட்டு ’மாமன் நலுங்கு’ நிகழ்ச்சிக்காக, அம்மா கிராமத்திற்கு சென்று இருந்தேன். காட்டில் தேடிய மூலிகை காலில் பட்ட கதையாக,  அவரது வீட்டிலும் இதே செடிகள் இருந்தன. அவர் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிபவர். அவரும் இதனை SPIDER LILY என்று உறுதிப்படுத்தியதோடு Ornamental Plants வகையைச் சேர்ந்த செடி என்றும் குறிப்பிட்டார். இன்று அவரது வீட்டில் எனது செல்போனில் எடுத்த படம் ஒன்று கீழே. 

 

39 comments:

  1. பூக்களின் அழகைப் பார்த்தால் ,லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்று பாடத் தோன்றுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பாடினால் போயிற்று.

      Delete
  2. பூப்போன்ற அழகான பதிவு. பொருத்தமான படங்கள். ஏராளமான விபரங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு V.G.K அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    ‘லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே...!’ என்று அந்த மலர் பார்த்துப் பேசும்...!

    பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ‘ மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே...!

    த.ம. 3



    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  4. தங்களின் இப்பதிவும் படங்களும் அம்மலரின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் எங்களுக்கு உண்டாக்கிவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் இந்த செடியை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைப்பதாக இருந்தால், பெரிய அளவுள்ள, சிமெண்ட் பூந்தொட்டிகளில் வைத்து வளர்க்கவும்.

      Delete
  5. கண்களுக்கு விருந்தளிக்கும் படங்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. Replies
    1. எல்லோருடைய பதிவிலும், தமிழ்மணம் இப்படித்தான், கருத்துரை எழுதி வெளியிட்ட பிறகு, அதன் ஓட்டுப்பட்டை காணாமல் போய்விடுகிறது. பதிவை விட்டு வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றால் வந்து விடுகிறது. நான் உங்கள் பதிவுகளில், ஒவ்வொரு முறையும் இரண்டுமுறை வந்துதான் தமிழ்மணத்தில் வாக்களிக்கிறேன்.

      Delete
  7. தம +1
    அழகான லில்லி மலர்....

    ReplyDelete
  8. ஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தேன் எங்கே போயிற்று. தாவரங்கள் பற்றிய என் அறிவு மிகக் குறைவு. எங்கள் வீட்டில் பிரம்ம கமலம் என்னும் பூச்செடி இருக்கிறதுஅதுவும் வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் விடியலில் தான் மலர்ந்து காண முடியும் நிஷாகந்தி என்றும் சொல்வார்கள் மலர்கள் என்றும் மகிழ்ச்சி தருபவை.எந்த மலரும் செடியில் இருக்கும்போதுதான் மிக அழகு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய ஜீ.எம்.பி அவர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களாக வெளியூர் பயணங்கள். காலதாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். உங்களுடைய நீண்ட பின்னூட்டம் என்ன ஆயிற்று என்று எனக்கும் தெரியவில்லை. இமெயிலிலும், கருத்துரைப் பெட்டியிலும், Spam இலும் தேடிப் பார்த்து விட்டேன். ஏதோ Tech Error என்று நினைக்கிறேன்.

      சிரமம் பாராது, மீண்டும் கருத்துரை தந்த தங்கள் அன்பிற்கு நன்றி. கீழே உள்ள சில பின்னூட்டங்களுக்குப் பிறகு மேலே உள்ள பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்.

      Delete

  9. தங்கள் வீட்டில் இருப்பது ஆப்ரிக்கன் லில்லி இல்லையோ என நினைக்கிறேன்.அது ஒருவேளை Tiny-Lip Eria ஆக இருக்கக்கூடும். இருப்பினும் ஓரிரு நாட்களில் அதனுடைய சரியான பெயரை சரி பார்த்து சொல்கிறேன். படமும் அருமை! பூக்களும் அருமை!!

    ReplyDelete
    Replies


    1. உங்கள் வீட்டில் உள்ளது ஆப்ரிக்கன் லில்லி செடி அல்ல. இது Rain Lilly ஆகும். இது Rain flower, Zephyr lily, Magic lily, Atamasco lily, என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. Amaryllidaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்த்த இதனுடைய தாவரப் பெயர் Zephyranthes candida ஆகும். இது மழைக்காலத்தில் தான் பூக்கும். மழைக்காலம் முடிந்ததும் பட்டுப்போய் விடும். ஆனால் மண்ணில் உள்ள வேர்க்கிழங்கு (இதை ஆங்கிலத்தில் Rhizome என்பார்கள்) உயிர்ப்புடன் இருக்கும். அடுத்த மழைக்கு புதிய இலைகள் வெளியே வந்து பின்னர் பூ பூக்கும். இதில் பல வண்ணங்கள் உண்டு. கேரளாவில் எல்லோர் வீட்டிலும் இருக்கும். இது மழை வந்தவுடன் பூப்பதால் Rain Lilly என அழைக்கப்படுகிறது.

      Delete
    2. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி. நீங்கள் மேலே சொன்ன Tiny-Lip Eria, Rain Lilly, etc... முதலானவற்றை கூகிளில் தேடியதில், எங்கள் வீட்டுச் செடியின் இலைகள் மட்டுமே ஒத்து போகின்றன; பூக்கள் வேறுபட்டு இருக்கின்றன. எனக்காக பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தகவல்கள் திரட்டித் தந்த தங்களுக்கு நன்றி.

      Delete
  10. அருமையான வண்ணப்புகைப்படங்கள்!! ஆண்டுகளை நினைவில் வைத்திருப்பது வியப்பாக உள்ளது. மல(ரும்)ரின் நினைவுகள்..

    ReplyDelete
  11. அழகு மலர்கள்.. ஆனால் இவை African lily அல்லவென்று தோன்றுகிறது. அவை நீலநிற மலர்களைக் கொண்டவை. அநேகமாய் இது Pancratium longiflorum ஆக இருக்கலாம். http://www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html எதற்கும் இங்கு சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன தகவல்களை வைத்து கூகிளில் பார்வையிட்டு ஒப்புமை செய்து கொண்டேன். எங்கள் உறவினர் (தோட்டக்கலை) ஒருவரும், அவரது ஊருக்கு நான் சென்று இருந்த போது, நீங்கள் குறிப்பிட்ட தகவல்களை, நேரில் எனக்கு உறுதி செய்தார். எனவே மேலே பதிவிலும் தலைப்பு உட்பட மாற்றம் செய்துள்ளேன். மீண்டும் நன்றி.

      Delete
  12. இந்த செடி எங்கள் கோயிலில் இருந்தது. பாதாள சம்பங்கி என்று சொல்லுவார்கள். தோண்டினால் கீழே நிறைய கிழங்குகள் இருக்கும். அதை பதியவைத்தால் புதிய செடி உருவாகிவிடும். மாலை நேரத்தில் பூக்கும் வாசனை ஆளைத் தூக்கும். இந்த செடிகளை கம்பளிப்புழு தாக்கும். எத்தனை முறை உலர்ந்தாலும் சிறிது ஈரம் படின் வளர்ந்துவிடும். சில மாதங்கள் முன்பு எங்கள் வீட்டின் முன்னே கூட வளர்ந்து வந்தது. கம்பளி புழு வந்தமையால் குழந்தைகளை கடித்துவிடும் என என் அப்பா பெயர்த்தெடுத்துவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் தகவல்களுக்கு நன்றி. பாதாள சம்பங்கி என்று கூகிளில் தேடியதில், சம்பங்கி மலர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன. பாதாள சம்பங்கி பற்றிய எனது தேடுதல் இன்னும் தொடரும். நீங்களே அந்த செடியின் படத்துடன், இன்னும் அதிக தகவல்களுடன் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

      Delete
  13. ஏதோ ஒரு பாடல்! லில்லி மலரே என்று வருமல்லவா! படங்கள் அருமை இளங்கோ!

    ReplyDelete
    Replies
    1. லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
      உன்னைப் பார்த்ததிலே
      செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
      பெண்ணைப் பார்த்ததிலே –
      என்று தொடங்கும் பாடல் , எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தில் வருகின்றது;. கவிஞர் கண்ணதாசன் இயற்றியது. புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  14. அது என்னவோ தெரியல...லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்சி.....பக்கம் முழுவதும் படங்களால் அலங்கரித்தது அத்தனை அழகு....பூக்களின் நேசரே... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. 'லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்சி' - பழைய தமிழ் திரைப்படங்கள், கதைகள் இவற்றில் லில்லி டீச்சர், லில்லி நர்ஸ் என்று லில்லி பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அல்லது லில்லி என்ற பெயர் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத மலரும் நினைவுகளில் ஒன்றாக இருக்கலாம். கருத்துரை தந்த கவிஞருக்கு நன்றி.

      Delete
  15. படங்களை இவ்வளவு காலவெளியில்
    சேமித்து வெளியிட்டிருப்பது
    பிரமிக்க வைக்கிறது
    அற்புதமான வண்ணமயமான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி. கேமரா அல்லது செல்போன் - இவற்றில் எடுக்கப்படும் எல்லா படங்களையும் கம்ப்யூட்டரில் சேர்த்து வைத்துள்ளேன். மேலே உள்ள படங்கள் பின்னாளில் பயன்படும் என்று சேமித்து வைக்கப்பட்டவை. இப்போது வலைப்பதிவிற்கு உதவுகின்றன.

      Delete
  16. ஸ்பைடர் லில்லி அழகாக உள்ளது. எங்கள் வீட்டிலும் முன்பு இருந்தது. இப்போது இல்லை ஒருவேளை மீண்டும் துளிர்க்கலாம் உங்கள் வீட்டில் துளிர்த்தது போல. படங்கள் மிக மிக அழகு.

    கீதா: முன்பு வாடகை வீட்டில் வளர்த்ததுண்டு. ஆர்னமென்டல் பூ என்பதால் ஆர்ன்மென்டல் பொக்கே வியாபாரம் செய்த சிலர் என்னிடமிருந்து வாங்கிச் சென்றதுண்டு ஃப்ரீயாகத்தான். அப்போது, நான் அறிந்தது என்னவென்றால், ஆர்னமென்டல் பூக்களை வீட்டில் நாம் வளர்த்தால் மாதம் நல்ல சம்பாத்தியம் பெற முடியும் என்று. ஆனால் அப்போது வீடு மாறிக் கொண்டே இருந்ததால் அதைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. வீட்டில் அப்படிச் செய்வதற்கு அனுமதியும் இல்லை. இப்பொது ஃப்ளாட் என்பதால் இடம் குறைவு என்பதால் விருப்பத்திற்கும் வளர்க்க வசதியில்லை.

    அருமையான மிக மிக அழகான படங்கள் ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துரை தந்த அன்பின் சகோதரர் - சகோதரி இருவருக்கும் நன்றி.

      Delete
  17. பூ அழகாக இருக்கிறது. ஆ! பூச்சிகள்...

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. கோடைமழையில் துளிர்த்த இந்த செடியில்,இந்த வருடம் பூச்சிகள் இல்லை.

      Delete
  18. சூப்பர் போட்டோகிராபி

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஸ்ரீராம் அவர்களூக்கு நன்றி.

      Delete