Wednesday 30 July 2014

பைபிள் ஓவியங்கள்


நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தது ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில்தான். அப்போதெல்லாம் ஞானோபதேசம் எனப்படும் வகுப்புகளை கிறிஸ்தவ பிள்ளைகளுக்கும், நல்லொழுக்கம் எனப்படும் வகுப்புகளை பிற சமயம் சார்ந்த பிள்ளைகளுக்கும் அந்த பள்ளியில் நடத்தினார்கள்.  நான் நல்லொழுக்க வகுப்பிற்குச் சென்றபோதிலும் கிறிஸ்தவ நண்பர்கள் வைத்து இருக்கும் “நற்கருணை வீரன் எனப்படும் பைபிள் படக் கதைப் பிரசுரங்களையும் மற்ற நூல்களையும் வாங்கிப் படிப்பேன். அந்த வகையில் அந்த நூல்களில் உள்ள பைபிள் சம்பந்தப்பட்ட வண்ண ஓவியங்கள் எனது மனதைக் கவ்ர்ந்தன.

இந்துக் கோயில்கள் சென்றாலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் சென்றாலும் அங்குள்ள வண்ண ஓவியங்களை ரசிப்பவன் நான். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்றால் உட் கூரை ஓவியங்கள் (CEILING PAINTINGS) , சுவர்ச் சித்திரங்கள் (WALL PAINTINGS) மற்றும் ஜன்னல்களில் உள்ள கண்ணாடி ஓவியங்கள் (GLASS PAINTINGS) முதலானவற்றைக் காணலாம். அந்த ஓவியங்கள் அனைத்தும் மைக்கேல் ஆஞ்சலோ (Michelangelo) லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) மற்றும் ரபேல்(RAPHAEL ) போன்ற இத்தாலிய ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே இருப்பதைக் காணலாம். மேலும் பைபிள் சம்பந்தப்பட்ட நூல்களிலும் இந்த ஓவியங்களைக் காணலாம். அந்த வகையில் சில பைபிள் ஓவியங்கள் இங்கே.

குழந்தை இயேசு ( INFANT JESUS)

இயேசு பெத்லேகம் என்ற ஊரில் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார். இதனடிப்படையில் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் நிறைய உண்டு. மேலே உள்ள ஓவியம் மிகவும் பிரபலமானது. வரைந்த ஓவியர் யாரென்று அறிய முடியவில்லை.

இயேசுவின் ஞானஸ்ஞானம் (BAPTISM OF JESUS CHRIST)


அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் என்பவர் யூதேயாவின் வனாந்தரத்தில் பொது மக்களுக்கு போதனைகள் செய்து கொண்டு இருந்தார். யோவானின் போதனையைக் கேட்க நிறைய மக்கள் வந்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தார். இயேசு கலிலேயாவிலிருந்து  யோர்தான் நதிக்கரைக்கு வருகிறார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுத்தார். பின்னர் யோவான் இயேசுவின் வற்புறுத்தலுக்குப் பிறகு அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். படம் வரைந்த ஓவியர் BARTOLOME ESTEBAN MURILLO   

இயேசு கோயில் வியாபாரிகளை விரட்டுதல்(Casting out the Money Changers)

(படம் மேலே) Christ Cleansing the Temple

இயேசு ஒருநாள் ஜெருசேலம் நகரில் உள்ள கோயிலுக்கு செல்கிறார். அங்கே ஆடு மாடுகள் அடைந்து இருப்பதையும், வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரே கூச்சலாக வியாபாரம் செய்வதையும், சூதாட்ட்ங்கள் நடப்பதையும் காண்கிறார். கோயில் கொள்ளையர்கள் கூடாரானமானதைக் கண்டு, மனம் வெகுண்ட இயேசு அவர்களை விரட்டி அடிக்கிறார். அந்த காட்சியை சொல்லும் ஓவியம் இது. வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH

இயேசுவின் மலைப் பொழிவு (THE SERMON ON THE MOUNT)


(படம் மேலே) ஒரு மலைப் பகுதியில் தனது சீடர்களுக்கும் பொது மக்களுக்கும் இயேசு பிரசங்கம் செய்தார். அந்த சொற்பொழிவு இயேசுவின் மலைப் பொழிவு எனப்படுகிறது. படம் வரைந்த ஓவியர் CARL HEINRICH BLOCH

ஊதாரி மைந்தன் (The Prodigal Son)

இயேசு சொன்ன உவமைக் கதை இது. ஒருவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அப்பன் பேச்சை கேட்டு வீட்டில் இருக்கிறான். இளையவன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தால் சொத்தில் தனது பங்கைபிரித்துத் தரும்படி வாங்கிக் கொண்டு வெளிதேசம் செல்கிறான். அந்த மகன் என்றேனும் ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் தகப்பன் இருக்கிறான். வெளிதேசம் சென்ற மைந்தன் அங்கு சொத்துக்களை அழித்துவிட்டு ஒரு குடியானவனிடம் பன்றி மேய்ப்பவனாக இருக்கிறான். மனம் ருந்திய அவன் தனது வீடு திரும்புகிறான். அவன் வீட்டிற்கு தொலைவில் வரும் போதே அவனை கவனித்து விட்ட அவனது தந்தை ஓடி வந்து வரவேற்கிறான். மனம் திரும்பிய அவனை அவனது தந்தை மன்னித்து ஏற்றுக் கொள்கிறான். இந்த கதையை விளக்கும் படம் இது. படத்தினை வரைந்தவர் Harold Copping

கடைசி இரவு உணவு ( LAST SUPPER)

இயேசுநாதர் தனது சீடர்களுடன் இரவு உணவு உண்ணுகிறார். அதுசமயம் யூதாஸ் என்ற அவரது சீடனே அவரைக் கன்னத்தில் முத்தமிட்டு இன்னார்தான் இயேசு என்று காட்டிக் கொடுக்கிறான். அதன் பின்னர் இயேசுவை அரண்மனைக் காவலர்கள் கொண்டு செல்கின்றனர். அடுத்தநாள் இயேசு சிலுவையில் அறையப் படுகிறார். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து கடைசி இரவு உணவு ( LAST SUPPER) எனப்படும் இந்த ஓவியத்தை மிலான் நகரில் உள்ள, சாண்டா மரியா தேவாலயத்தில் லியனார்டோ டா வின்சி வரைந்தார். நாளடைவில் இந்த ஓவியம் பழுதடைந்து போகவே பின்னாளில் சீர்திருத்தம் செய்து புதுப்பித்தனர். பிற்பாடு நிறைய ஓவியர்கள் அந்த ஓவியத்தின் நகலை வரைந்தனர்.

(படம் மேலே) இயேசு தனது சீடர்களுடன் கடைசியாகக் கலந்து கொண்ட இரவு உணவுக் காட்சி. படம் வரைந்தவர் JUAN DE JUANES  

சிலுவையில் இயேசு (JESUS’ CRUCIFIXION) மற்றும் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus)


(படம்: மேலே சிலுவையில் இயேசு ஓவியர் CARL HEINRICH BLOCH ) 

சிலுவையில் அறையப்பட்ட இயேசு இறந்து போகிறார் அவரை ஒரு சிறு குகைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார்

மேலே உள்ள உயிர்த்தெழுதல் படத்தினை வரைந்தவர் ஓவியர் ரபேல் (RAPHAEL)

கட்டுரை எழுத துணை நின்றவை:
MY THANKS TO –
மத்தேயு சுவிசேஷம்
www.google.co.in

 

49 comments:

  1. பள்ளிப் பருவத்தில் இதைப் போல படங்களை நானும் சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் கால வெள்ளத்தில் அவை தொலைந்து விட்டன.

    என்னதான் இணையத்தில் படங்கள் கிடைத்தாலும் பள்ளி வயதில் சேர்த்த மகிழ்ச்சியைத் தருவதில்லை.

    மேலும் நவீனம் என்ற பெயரில் படங்களின் அழகை அழித்து விடுகின்றார்கள் என்பது எனது கருத்து.

    இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. கெட்ட குமாரன் (Prodigal Son ) உவமானம், யாரால் மறக்க இயலும்? அந்த மகன் மனம் திரும்பி வருகையிலே, அவன் தூரத்தில் வருவதை பார்த்த அவன் தகப்பன், "வெட்ரா காடாவை" என்று கூவி விட்டு மகனை நோக்கி ஓடினாரே...தகப்பனின் பாசத்திற்க்கான இலக்கணம் அல்லவா அது... அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. அருமையான படங்கள் + அற்புதமான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. மதத்தைக் கடந்து மனதில் நிற்கும் ஓவியங்கள் !
    த ம 2

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    அருமையான விளக்கம்.+படங்களும் அழகு அறியாத தகவலையும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமையான ஓவியங்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  8. நானும் ஓர் ஓவியன் என்பதால் நீங்கள் பகிர்ந்த படங்களையும் விளக்கங்களையும் இரசித்தேன். அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. உயிருள்ள படங்கள் ! அனைத்தும் அருமை!

    ReplyDelete
  10. படங்களும் ,விளக்கங்களும் அருமை..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  11. அருமையான ஓவியங்கள்..

    ReplyDelete
  12. சிறந்த ஓவியங்கள்
    வரலாற்று உண்மைகள்
    தொடருங்கள்

    ReplyDelete

  13. ஆஹா...அற்புதமான ஓவியங்கள் ,அதில் தங்களின் விளக்கம் ஓவியம் பார்ப்பதை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  14. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // பள்ளிப் பருவத்தில் இதைப் போல படங்களை நானும் சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் கால வெள்ளத்தில் அவை தொலைந்து விட்டன. என்னதான் இணையத்தில் படங்கள் கிடைத்தாலும் பள்ளி வயதில் சேர்த்த மகிழ்ச்சியைத் தருவதில்லை. //

    ஆமாம் அய்யா! அந்த மகிழ்ச்சியான நாட்களைப் போல இனிமேல் வரும் நாட்கள் இருக்கப் போவதில்லை.

    ReplyDelete
  15. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > விசுAWESOME said...

    விசுAWESOME அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // கெட்ட குமாரன் (Prodigal Son ) உவமானம், யாரால் மறக்க இயலும்? அந்த மகன் மனம் திரும்பி வருகையிலே, அவன் தூரத்தில் வருவதை பார்த்த அவன் தகப்பன், "வெட்ரா காடாவை" என்று கூவி விட்டு மகனை நோக்கி ஓடினாரே...தகப்பனின் பாசத்திற்க்கான இலக்கணம் அல்லவா அது... அருமையான பதிவு. நன்றி. //

    இயேசுவின் இந்த உவமானக் கதையை மனம்விட்டு உள் வாங்கி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. மனதார ரசித்துப் படித்தால் அன்றி இதுமாதிரியான கருத்துரையைத் தர இயலாது. உங்களின் இந்த கருத்துரையே இயேசுவின் இந்த உவமான கதை ஓவியத்திற்கு நல்ல விளக்கமாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > Bagawanjee KA said...

    // மதத்தைக் கடந்து மனதில் நிற்கும் ஓவியங்கள் !
    த ம 2 //

    ஆம் சகோதரரே! இவை மதத்தைக் கடந்த மனதில் நிறைந்த ஓவியங்கள். தங்களின் ஆழமான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > ரூபன் said...

    // வணக்கம் ஐயா! அருமையான விளக்கம்.+படங்களும் அழகு அறியாத தகவலையும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 4வது வாக்கு //

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும், பாராட்டுரைக்கு நன்றியும்!

    ReplyDelete
  20. மறுமொழி > கோமதி அரசு said..

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! .

    ReplyDelete
  21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // நானும் ஓர் ஓவியன் என்பதால் நீங்கள் பகிர்ந்த படங்களையும் விளக்கங்களையும் இரசித்தேன். அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்! //

    கருத்துரை தந்த அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி! நீங்கள் வரைந்த ஓவியங்களை உங்கள் பதிவினில் கண்டு ரசித்து இருக்கிறேன்.

    ReplyDelete
  22. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // உயிருள்ள படங்கள் ! அனைத்தும் அருமை! //

    புலவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // படங்களும் ,விளக்கங்களும் அருமை..பாராட்டுக்கள்.! //

    ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > கே. பி. ஜனா... said...

    சகோதரர் எழுத்தாளர் கே. பி. ஜனா அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > R.Umayal Gayathri said...

    அன்பு சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  27. ஆமாம் ஐயா அப்போதெல்லாம் கிறித்தவப்பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகள் பிற மதத்தார்களுக்கும், கிறித்தவ சமய வகுப்புகள் கிறித்தவர்களுக்கும் நடத்தப்படும். ஆனால் இப்போதெல்லாம் அது குறைந்ததாகத் தோன்றுகின்றது.

    படங்கள் மிக அருமை ஐயா! அதன் கதைகளும், விளக்கங்களும் ஒரு சில அறிந்திருந்தாலும் சில அறியாதவை. அறிந்து கொண்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  28. படங்கள் உயிருடன் காட்சியளிக்கின்றன
    கடைசி உணவு படத்தினை அடிப்படையாகக் கொண்டு
    டான் பிரவுன் என்ற ஆங்கில எழுத்தாளர் அருமையான
    கதை ஒன்றினை எழுதியுள்ளார்
    நன்றி ஐயா

    ReplyDelete
  29. வாழ்நாள் முழுதும் பார்த்து ரசிக்கும் உயிர்ப்பு ஓவியங்கள்.
    விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி.
    இதை ஓர் ஆக்கமாகக் கொண்டு வந்த தங்கள் சிந்தனைக்கும் நன்றி ஐயா.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  30. இந்து சமயக் கோவில்களுக்குச் செல்வதுபோல் கிருத்துவ தேவாலயங்களுக்கும் செல்வது உண்டு. பதிவில் ஓவியங்கள் மூலம் இயேசுவின் கதையும் ஓரளவுக்கு கூறி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் ஆசிரியர் V.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2)

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete

  33. மறுமொழி > kovaikkavi said...

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // பதிவில் ஓவியங்கள் மூலம் இயேசுவின் கதையும் ஓரளவுக்கு கூறி விட்டீர்கள். வாழ்த்துக்கள். //

    நான் வரிசைக் கிரமமாக படங்களை அமைக்க நினைத்தேன். அதே இயேசுவின் கதையைச் சொல்வது போல எதார்த்தமாக அமைந்து விட்டது. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  35. ஓவியங்களுடன் உரிய செய்திகளை நுட்பமாகக் கூறி எங்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். படங்களைப் பார்த்துக்கொண்டு செய்தியைப் படித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு முறை வெளியாகும்போதும் நான் பார்க்கும் Ten Commandments திரைப்படம் மனதிற்கு வந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களது கருத்துரைக்கு நன்றி!

    // ஓவியங்களுடன் உரிய செய்திகளை நுட்பமாகக் கூறி எங்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். //

    அந்த படங்களில் எனது மனதை பறி கொடுத்ததாலேயே இந்த பதிவினை எழுதினேன். மற்றைய ஒஅடங்களையும் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இணைப்புகளை கொடுத்துள்ளேன்.

    //படங்களைப் பார்த்துக்கொண்டு செய்தியைப் படித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு முறை வெளியாகும்போதும் நான் பார்க்கும் Ten Commandments திரைப்படம் மனதிற்கு வந்தது. வாழ்த்துக்கள். //

    நான் நிறைய வண்ணப் படங்களுடன் - திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்ற ஒரு பதிவினையும் எழுதியுள்ளேன். நேரம் இருக்கும் போது பாருங்கள்.
    http://tthamizhelango.blogspot.com/2012/10/ten-commandments.html


    ReplyDelete
  37. அருமையான படங்கள் அய்யா..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. அன்புள்ள ஐயா, தங்களின் வலைத்தளம் ’அரட்டை’ திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களால் வலைச்சரத்தில் மிகவும் பாராட்டிப்பேசப்பட்டுள்ளது. அதற்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா. ;))))) அன்புடன் VGK

    ReplyDelete
  39. அழகான ஓவியங்கள். நானும் பத்தாம் வகுப்பு வரை ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் படித்ததாலும் வீட்டுக்கு அருகிலேயே தேவாலயம் ஒன்று இருந்ததாலும் பைபிள் கதைகளில் எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அடிக்கடி தேவாலயம் சென்று பிரார்த்தனை செய்யும் வழக்கமும் உண்ட். நற்கருணை வீரன் எங்கள் பள்ளியிலும் வழங்கப்படும். முண்டியடித்து வாசிப்போம். பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட பதிவு. நன்றி ஐயா.

    ReplyDelete
  40. மறுமொழி > Mathu S said...

    சகோதரர் எஸ்.மது அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  41. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // அன்புள்ள ஐயா, தங்களின் வலைத்தளம் ’அரட்டை’ திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களால் வலைச்சரத்தில் மிகவும் பாராட்டிப்பேசப்பட்டுள்ளது. அதற்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா. ;))))) அன்புடன் VGK //

    அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி! தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். உங்களின் இந்த தகவலை அப்போதே படித்து விட்டேன். கொஞ்ச நாட்களாக அடிக்கடி வெளியூர் பயணம். எனவே வலைப்பக்கம் வரவில்லை!


    ReplyDelete
  42. மறுமொழி > கீத மஞ்சரி said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  43. மறுமொழி > அன்பை தேடி அன்பு said...

    சகோதரரின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  44. ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! ஓவியர் என்ற முறையில் வண்ணக்கலவைகளின் அழகு என்னை மிகவும் ரசிக்க வைத்தது!!

    ReplyDelete
  45. உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  46. மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 1, 2 )

    // ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! ஓவியர் என்ற முறையில் வண்ணக்கலவைகளின் அழகு என்னை மிகவும் ரசிக்க வைத்தது!!//

    சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி!

    // உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்! //

    சகோதரிக்கு நன்றி1 சூழ்நிலையின் காரணமாக இப்போதைக்கு தொடர்பதிவு எழுத இயலவில்லை.

    ReplyDelete
  47. மிகச்சிறப்பு ஐயா. ஓவியங்கள் அனைத்தும் இயேசுவின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியது.

    நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ஐயா.

    ReplyDelete